இதுவும் அது 272. | பரிசில் சுமந்தன கவிகள் | | பகடுசு மந்தன திறைகள் அரசு சுமந்தன இறைகள் அவனி சுமந்தன புயமும். |
(பொ-நி.) கவிகள் பரிசில் சுமந்தன; திறைகள் பகடு சுமந்தன; அரசு இறைகள் சுமந்தன; புயம் அவனி சுமந்தன; (எ-று.) (வி-ம்.) பரிசில் - அன்புக்கொடை. கவி - புலவோர்; நாற்கவிகள். பகடு - எருது. திறை - பகையரசர் இடுவது. அரசு - சிற்றரசர். இறை- குலோத்துங்கன் கீழ் இருந்து அரசாள்வோர் அளிக்கும் இறைப்பொருள். அவனி - உலகம். புயம்- குலோத்துங்கன் தோள்கள். (41) இதுவும் அது 273. | விரித்த வாளுகிர்வி ழித்த ழற்புலியை | | மீது வைக்கஇம யத்தினைத் திரித்த கோலில்வளை வுண்டு நீதிபுரி செய்ய கோலில்வளை வில்லையே |
(பொ-நி.) புலியை வைக்க இமயத்தினைத் திரித்த கோலில்வளைவுஉண்டு; நீதிபுரி கோலில் வளைவு இல்லை. (எ-று.) (வி-ம்.) வாள் - ஒளி. உகிர் - நகம். தழல்-நெருப்பு. மீது- இமயத்தின்மீது. கோல் - செண்டு. செய்ய கோல் - செங்கோல். வளைவு இல்லை-கோட்டம் இல்லை. (42) இதுவும் அது 274. | கதங்க ளிற்பொருதி றைஞ்சி டாவரசர் | | கால்க ளில்தளையு நூல்களின் பதங்க ளில்தளையு மன்றி வேறொரு பதங்க ளில்தளைக ளில்லையே. |
(பொ-நி.) இறைஞ்சிடா அரசர் கால்களில் தளையும், பதங்களில் தளையும், அன்றி, வேறொரு பதங்களில் தளைகள் இல்லை, (எ-று.) |