பக்கம் எண் :

அவதாரம்111


     (வி-ம்.)  கதம் - சினம்.  பொருது - போர்செய்து.  இறைஞ்சுதல் -
வணங்குதல். அரசர் - பகையரசர். தளை - விலங்கு.  நூல்-செய்யுள் நூல்.
பதம் - சொல். தளை - வெண்டளை  முதலியன.  பதம் - இடம். தளை-
சிறைசெய்தல் முதலியன.                                   (43)

இதுவும் அது

275.மென்க லாபமட வார்கள் சீறடி
      மிசைச்சி லம்பொலிவி ளைப்பதோர்
இன்க லாம்விளைவ தன்றி எங்குமொர்
     இகல்க லாம்விளைவ தில்லையே.

     (பொ-நி.) மடவார்கள்  சிலம்பொலி  விளைப்பதோர்   இன்கலாம்
விளைவதன்றி, இகல்கலாம் விளைவதில்லை; (எ-று.)

     (வி-ம்.) கலாபம்-மயில்.  இன்கலாம் - இனிய  மாறுபாடு; (சிலம்பின்
பரல் பலவும் ஒரே ஓசை உண்டாக்குமாறு ஒலிக்காமல் தாம்பல என்பதைக் காட்டிச் சற்று முன் பின்னாக ஒலித்தல்.) இகல்கலாம்-பகையால் எழும்
பூசல்.                                                  (44)

குலோத்துங்கன் பொழுது போக்கு

276.வருசெருவொன் றின்மையினான் மற்போருஞ்
      சொற்புலவோர் வாதப் போரும்
இருசிறைவா ரணப்போரும் இகன்மதவா
     ரணப்போரும் இனைய கண்டே,

     (பொ-நி.)செரு இன்மையினான,்  மற்போரும்,   வாதப்  போரும்,
சிறைவாரணப்போரும்,  மதவாரணப்போரும்  இனைய  கண்டு, (எ-று.)

     (வி-ம்.)  செரு-போர். இன்மையினான் - இல்லாததால். வாதப்போர்-
சொல்லப்பட்ட  மாறுபாடு.  சிறைவாரணம்-கோழி. மதவாரணம் - யானை.
                                                      (45)

 இதுவும் அது

277.கலையினொடும் கலைவாணர் கவியினொடும்
      இசையினொடும் காதல் மாதர்
முலையினொடும் மனுநீதி முறையினொடும்
     மறையினொடும் பொழுது போக்கி,