(பொ-நி.) கலையினொடும், கவியினொடும் இசையினொடும், முலையினொடும், நீதி முறையினொடும், மறையினொடும் பொழுதுபோக்கி, (எ-று.) (வி-ம்.) கலை - பல்கலை நூல்கள். கலைவாணர் - கலைவல்ல புலவர்கள். கவி-இனிய செய்யுட்கள். இசை-பண். முறை-நீதி. (46) குலோத்துங்கன் பரிவேட்டை யாடப் புறப்பட நினைந்தது 278. | காலாற்றண் டலையுழக்கும் காவிரியின் | | கரைமருங்கு வேட்டை யாடிப் பாலாற்றங் கரைமருங்கு பரிவேட்டை ஆடுதற்குப் பயண மென்றே, |
(பொ-நி.) காவிரியின் கரைமருங்கு வேட்டையாடி, பரிவேட்டை ஆடுதற்குப் பயணம் என்று, (எ-று.) (வி-ம்.) கால்-வாய்க்கால். தண்டலை-சோலை. உழக்குதல்-கலக்குதல். பயணம்-புறப்படுதல். கரைமருங்கு - கரைப்பக்கம். பரிவேட்டை-குதிரை மேற்கொண்டு வேட்டையாடல். (47) நால்வகைச் சேனைகளும் திரண்டமை 279. | முரசறைகென் றருளுதலும் முழுதுலகும் | | ஒருநகருட் புகுந்த தொப்பத் திரைசெய்கடல் ஒலியடங்கத் திசைநான்கின் படைநான்கும் திரண்ட ஆங்கே. |
(பொ-நி.) அருளுதலும், படைநான்கும், கடல் ஒலி அடங்க, முழுதுலகும் நகருட் புகுந்ததொப்ப, ஆங்கே திரண்ட, (எ-று.) (வி-ம்.) முரசு -பேரிகை. திரை-அலை. கடல் ஒலி அடங்கச் சேனை ஒலி மிகுந்ததென்க. நான்கின் - நான்கினின்றும். படை நான்கு -யானை குதிரை தேர் காலாள் என்னும் நால்வகைப்படை. அறைக - அடிக்க. திரண்ட-ஒன்று கூடின. (48) |