குலோத்துங்கன் புறப்பாடு 280. | அழகின்மே லழகுபெற அணியனைத்தும் | | அணிந்தருளிக் கணித நூலிற் பழகினார் தெரிந்துரைத்த பழுதறுநாட் பழுதற்ற பொழுதத்து ஆங்கே. |
(பொ-நி.) அணி அனைத்தும் அணிந்தருளிக், கணிதநூல் பழகினார் உரைத்த பழுதறுநாள் பழுதற்ற பொழுதத்து; (எ-று.) (வி-ம்.) அழகின்மேல் - இயற்கையான தன் உடலழகுக்கு மேலும். அணி - அனைத்தும் அழகுபெற அணிந்தருளி என இயைக்க, அணிகள் அழகுபெற்று விளங்குமாறு அவற்றை அணிந்தான் என்க. கணித நூல்-சோதிடநூல். பழுது அறுநாள் - குற்றமற்ற நல்ல நாள். பொழுதத்து- பொழுதின்கண். (49) இதுவும் அது 281. | அனக தானமறை வாணர்பலர் நின்று பெறவே | | அபய தானம்அப யம்புகுது மன்னர் பெறவே கனக தானம்முறை நின்றுகவி வாணர் பெறவே கரட தானம்மத வாரணமு மன்றுபெறவே. |
(பொ-நி.) மறைவாணர் அனகதானம் பெற, மன்னர் அபயதானம் பெற. கவிவாணர் கனகதானம் பெற, வாரணம் கரடதானம் பெற; (எ-று.) (வி-ம்.) அகம்-பாவம்; அனகம்-பாவமற்றது. மறைவாணர் -அந்தணர். அபயதானம்-அஞ்சல் அளித்தல். அபயம்-அடைக்கலம். புகுது மன்னர்- அடைகின்ற வேந்தர்கள். தானம்-பொன்தானம். முறைநின்று-தகுதியாக. கரடதானம் - மதம்பாயும் இடம். மதவாரணம் - மதங்கொண்ட யானைகள். யானைகளிப்பு மிகுந்தன என்க. (50) யானை மேற்கொண்டது 282. | மற்ற வெங்கட களிற்றின் உதயக்கி ரியின்மேல் | | மதிக வித்திட உதித்திடும் அருக்க னெனவே கொற்ற வெண்குடைக விப்பமிசைகொண்டு கவரிக் குலம திப்புடைக வித்தநில வொத்து வரவே. |
|