பக்கம் எண் :

114கலிங்கத்துப்பரணி

     (பொ-நி.)    மதிகவித்திட     உதித்திடும்    அருக்கன்    என
குடைகவிப்ப, களிற்றின்மிசை கொண்டு, கவரி நிலவு ஒத்துவர. (எ-று.)

     (வி-ம்.)  கடம் - மதம். உதயக்கிரி-தோன்றும் மலை, மதிகவித்திட-
சந்திரன் சூழ்ந்துகொண்டிருக்க.   அருக்கன்  -   ஞாயிறு.   களிற்றின்
மிசைகொண்டு  என இயைக்க.  கவரிக்குலம் -வெண்சாமரைக்   கூட்டம்.
மதிப்புடை-சந்திரனின் இருபக்கங்களினும். கவித்த-கவிந்துகொண்டிருக்கின்ற.
நிலவு - நிலாவொளி. வெண்கொற்றக்குடைநிலாவையும்,  வெண்சாமரைகள்
நிலவொளியையும் ஒத்தன என்க.                             (51)

பல்வகை இயங்களின் முழக்கொலி

283.ஒருவ லம்புரி தழங்கொலி முழங்கி யெழவே
      உடன்மு ழங்குபணி லம்பல முழங்கி யெழவே
பருவம் வந்துபல கொண்டல்கண் முழங்கி யெழவே
     பலவி தங்களொடு பல்லிய முழங்கி யெழவே.

     (பொ-நி.)  வலம்புரி   எழ,   பணிலம்பல  எழ,  கொண்டல்கள்
எழு (வதுபோல) பல்லியம் எழ; (எ-று.)

     (வி-ம்.)  வலம்புரி  -  வலம்புரிச்சங்கு.   தழங்கு  ஒலி -ஒலிக்கும்
ஓசை. பணிலம்-சங்கு.  கொண்டல்-மேகம். எழவே-எழுதலையேபோல. பல்
இயம்  -  பல்வகை  இசைக்கருவிகள்.  பருவம்  வந்து - கார்காலம்  வர.
கொண்டல் -மேகம். பலவிதங்களொடு முழங்கி என இயைக்க.
                                                       (52)

பிறபல ஒலி முழக்கம்

284.மன்னர் சீர்சய மிகுத்திடை விடாத வொலியும்
      மறைவ லாளர்மறை நாள்வயின் வழாதவொலியும்
இன்ன மாகடன் முழங்கிஎழு கின்ற வொலியென்று
     இம்பர் உம்பரறி யாதபரி செங்கு மிகவே.

     (பொ-நி.)   சீர்சயம்   மிகுத்து   மன்னர்  இடைவிடாத  ஒலியும்,
மறைவலாளர் மறைவழாத ஒலியும், இன்னகடல் ஒலி என்று அறியாத பரிசு,
மிக; (எ-று.)