பக்கம் எண் :

அவதாரம்115


     (வி-ம்.) சீர்சயம்   மிகுத்து  - குலோத்துங்கனுடைய   சிறப்பையும் வெற்றியையும்  மிகுத்து. மறைவலாளர்  -  அந்தணர்.  நாள்வயின் மறை
என   இயைக்க;  நாள்தோறும்  ஓதத்தக்க  மறை என்க.  இன்னமாகடல்-
இவ்வகையான  பெரிய  கடல்தான்.  இம்பர் - இவ்வுலகத்தார்,  உம்பர் -
விண்ணுலகத்தார். பரிசு-தன்மை.                              (53)

 ஏழிசை வல்லபி உடனிருந்தமை

285.வாழி சோழகுல சேகரன் வகுத்த இசையின்
    மதுர வாரியென லாகுமிசை மாத ரிதெனா
ஏழு பாருலகொ டேழிசை வளர்க்க வுரியாள்
   யானை மீதுபிரி யாதுட னிருந்து வரவே.

     (பொ-நி.) இசையின்  மதுரவாரி  எனலாகும்  இசை மாது, ஏழிசை
வளர்க்க உரியாள் அரிது எனா உடன் இருந்துவர; (எ-று.)

    
 (வி-ம்.) சோழகுலசேகரன் - குலோத்துங்கன்.  இ்சையின் மதுரவாரி-
இசை இன்பக்கடல்.   இசைமாது:  ஏழிசை  வல்லபி  - அரிது  எனா -
பிரிந்திருத்தல் அரிதென்று.  ஏழுபார்  உலகு.  உலகின்கண்  உள்ள ஏழு
தீவுகளையும். அரிதெனா பிரியாது என இயைக்க. மூன்றாம் மனைவியாகிய
இவள் பிரியாது உடனிருந்தாள் என்க.                       (54)

தியாகவல்லி உடன் சென்றமை

286.பொன்னின் மாலைமலர் மாலைபணி மாறி உடனே
    புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ்பி டிவரச்
சென்னி யாணையுடன் ஆணையைந டத்தும் உரிமைத்
   தியாக வல்லிநிறை செல்விஉடன் மல்கி வரவே.

     (பொ-நி.)  காவலர்கள்  தேவியர்கள்  பணிமாறி  சூழ்பிடி  (மேல்)
வர. தியாகவல்லி உடன் மல்கிவர; (எ-று.)

    
 (வி-ம்.)   பொன்னின்   மாலை   -   பொன்னாலான மாலை.
பணிமாறி  - தியாகவல்லிக்கு  அணிவித்துத்தொண்டு  பூண்டு.   பிடி -
பெண்யானை.  புவனி  - உலகம்.  பிடிவர:  ஏழாவதன் தொகை. சென்னி-குலோத்துங்கன்.  ஆணையை  -  தன்ஆணையையும்.    நிறைசெல்வி -
குறைவற்ற    செல்வத்தையுடையாள்.   தியாகவல்லியாகிய   சிறைசெல்வி என்க.  உடன் - குலோத்துங்கன் பக்கத்தே. மல்கல்-நெருங்கல்.                (55)