பக்கம் எண் :

116கலிங்கத்துப்பரணி

அரசரும் பெண்களும் சூழ்ந்து வந்தமை

287.பிடியின் மேல்வரு பிடிக்குல மநேக மெனவே
      பெய்வ ளைக்கைமட மாதர்பிடி மீதின் வரவே
முடியின் மேன்முடி நிரைத்துவரு கின்ற தெனவே
     முறைசெய் மன்னவர்கள் பொற்குடை கவித்துவரவே.

     (பொ-நி.)  மடமாதர்  பிடிமீதின்  வர,  மன்னவர்கள்  பொற்குடை கவித்துவர; (எ-று.)

     (வி-ம்.) பிடி - பெண்யானை. குலம் - கூட்டம். பெய்வளை  கை -
வளையலணிந்த  கைகளையுடைய.  மடமாதர்-அரசபரிவார மகளிர். முடி-
மகுடம். பொற்குடை-பொன்னாலாகிய குடை.
                                                       (56)

அரசரோடு வீரர் சூழ்ந்து வந்தமை

288.யானை மீதுவரும் யானையு மநேக மெனவே
      அடுக ளிற்றின்மிசை கொண்டர சநேகம் வரவே
சேனை மீதுமொரு சேனைவரு கின்ற தெனவே
     தெளிப டைக்கல னிலாவொளி படைத்து வரவே.

     (பொ-நி.)   அரசு   அநேகம்   வர,   படைக்கலன்  நிலா  ஒளி
படைத்துவர; (எ-று.)

     (வி-ம்.) அடுகளிறு - கொல்கின்ற யானை. மிசை -மேலிடம். தெளி-
மாசற்ற. படைக்கலன் - வாள் முதலிய படைக்கருவி. நிலா ஒளி-நிலவைப்
போன்ற ஒளி. படைத்து-உண்டாக்கி.                          (57)    

முரசு முழக்கும் கொடி வரிசையும்

289. முகிலின் மேன்முகில் முழங்கிவரு கின்ற தெனவே
      மூரி யானைகளின் மேன்முர சதிர்ந்து வரவே
துகிலின் மேல்வரு துகிற்குலமு மொக்கு மெனவே
     தோகை நீள்கொடிகள் மேன்முகி றொடங்கி வரவே.

     (பொ-நி.)  யானைகளின்மேல்  முரசதிர்ந்துவர,  கொடிகள் மேல்
முகில் தொடங்கிவர; (எ-று.)

    
 (வி-ம்.) முகில்  -  மேகம்.  மூரி - வலிமை.  துகில் - துகிற்கொடி.
தோகை - பெருங்கொடிகள்.  முகில் தொடங்கி - மேகங்கள்  தொடர்ந்து.  வானத்தே துகிற்கொடியும் மேகமும் மாறுபட்டுத் தோன்றின என்க.
                                                      (58)