பெண்கள் தேர்மீது வந்ததும் புழுதி எழுந்ததும் 290. | தேரின் மீதுவரு தேர்களும நேகம் எனவே | | செம்பொன் மேகலை நிதம்பநிரை தேரின் வரவே பாரின் மீதுமொரு பாருளது போலும் எனவே படல தூளியு மெழுந்திடையின் மூடி வரவே. |
(பொ-நி.) நிதம்பநிரை தேரின் வர, படல தூளியும் இடையின் மூடிவர; (எ-று.) (வி-ம்.) மேகலை-மேகலை என்னும் அணி; இது, முப்பத்திரண்டு வடத்தினாற் செய்தது; நிதம்பம்-இடையைச் சார, முன் பக்கத்துள்ள பரந்த இடப்பகுதி. நிரை - வரிசை. பார் - உலகம். படலம்-கூட்டம். தூளி-புழுதி. இடை-வானிடை. (59) சேனைகளின் செலவு 291. | யானை மேலிளம் பிடியின் மேனிரைத் | | திடைய றாதுபோம் எறிக டற்கிணை சேனை மாகடற் கபய னிம்முறைச் சேது பந்தனம் செய்த தொக்கவே. |
(பொ-நி.) நிரைத்து, போம், கடற்கு இணை (யானை) சேனை அபயன் இம்முறை கடற்கு சேதுபந்தனம் செய்தது ஒக்க; (எ-று.) (வி-ம்.)நிரைத்து - வரிசையாக, எறி - அலை எறிகின்ற. இணை சேனை - ஒத்த சேனை. இம்முறை - இராமனாகப் பிறந்த பொழுதிலன்றி இப்பிறவியிலே, ஒக்க-ஒப்பாக இருக்க. முழுச்சேனையும் கடல்போலவும், யானைமேலும் பிடிமேலும் செல்வார் சேதுபந்தனம் செய்வார்போலவும் காட்சியளித்தனரென்க. (60) சிவிகையும் குடையும் சென்ற இயல்பு 292. | நீல மாமணிச் சிவிகை வெள்ளமும் | | நித்தி லக்குலக் கவிகை வெள்ளமும் காலி னான்வரும் யமுனை வெள்ளமும் கங்கை வெள்ளமும் காண்மின் என்னவே. |   |