(வி-ம்.) துகில்-ஆடை. முனிவெகுளி-ஊடலால் வந்த சினம். குதலை- மழலைச் சொல். விளைய - உண்டாக. நின்று-அகலாமல் நின்று. பெடை- பெண் அன்னம். நலீர்-நல்லீர்; பெண்களே. துகிலை 'விடுமின்' என்று சொல்லி அகலாமல் நிற்றலின் 'பிடிமின்' என்று சொல்லியது போலாம் என்க. (5) கனவுநிலை கூறி வி்ளித்தது 26. | எனத டங்கஇனி வளவ துங்கனருள் | | எனம கிழ்ந்துஇரவு கனவிடைத் தனத டங்கள்மிசை நகந டந்தகுறி தடவு வீர்கடைகள் திறமினோ. | (பொ-நி.) கனவிடை "வளவதுங்கன் அருள் அடங்க இனிஎனது" என மகிழ்ந்து நகம் நடந்த குறி தடவுவீர் திறமின். (எ-று) (வி-ம்.) அடங்க-முழுதும். வளவதுங்கன்-குலோத்துங்கன், தனதடம்- கொங்கைத்தடம். நகம் நடந்த-நகத்தால் உண்டான. குறி-கீற்றுக் குறிகளை. தடவுதல்-கையால் தொட்டுத் தொட்டுப் பார்த்தல். தடவுதல் நனவில் என்க. கனவிடைக் கண்ட நகக்குறியை நனவிடை ஆராய்ந்தன ரென்க. இவ்வாறு தடவியதற்குக் காரணம் கனவுக்கும் நனவுக்கும் வேற்றுமை யறியாமை என்க. (6) ஊடல் உவகை நிலை கூறி விளித்தது 27. | முனிபவர் ஒத்திலராய் முறுவல்கி ளைத்தலுமே | | முகிழ்நகை பெற்றமெனா மகிழ்நர்ம ணித்துவர்வாய் கனிபவ ளத்தருகே வருதலும் முத்துதிரும் கயல்களி ரண்டுடையீர் கடைதிற மின்திறமின். | (பொ-நி.) முறுவல் கிளைத்தலும், மகிழ்நர்வாய் பவளத்தருகே வருதலும், முத்து உதிரும் கயல்கள் உடையீர் திறமின் (எ-று.) (வி-ம்.) முனிபவரொத்து - ஊடல்கொண்டு. இலராய் பின் ஊடல் நீங்கியவராய். முறுவல்- புன்சிரிப்பு. கிளைத்தல்-தோன்றுதல்; உண்டாதல். முகிழ்நகை - புன்சிரிப்பு. மகிழ்நர் - கணவர். மணி - அழகு. துவர்வாய்- பவளம்போன்ற வாய். கனி - முதிர்ந்த; முற்றிய.பவளம்-பவளம்போன்ற வாய். வருதல் முத்தமிடற் கென்க. முத்து - முத்துப் போன்ற கண்ணீர். (மகிழ்ச்சிக் கண்ணீர் என்க) கயல்-மீன்போன்ற கண். ஊடல் நீங்கக் கண்டு தலைவன் முத்தமிடற்கு வர, அது கண்டு மகிழ்ச்சிக் கண்ணீர் உகுத்தாள் என்க. (7) |