இதுவும் அது 295. | எங்குமுள மென்கதலி யெங்குமுள | | தண்கமுகம் எங்குமுள பொங்கு மிளநீர் எங்குமுள பைங்குமிழ்கள் எங்குமுள செங்குமுதம் எங்குமுள செங்க யல்களே. | (பொ-நி.)கதலிஎங்குமுள; கமுகம் எங்குமுள; இளநீர் எங்குமுள; குமிழ்கள் எங்குமுள; குமுதம் எங்குமுள; கயல்கள் எங்குமுள; (எ-று.) (வி-ம்.) கதலி - தொடைகளாகிய வாழை. கமுகு-கழுத்துக்களாகிய பாக்கு மரம். இளநீர்-கொங்கைகள். குமிழ்-மூக்குக்களாகிய குமிழம் பூக்கள். குமுதம்-வாயிதழாகியசெவ்வாம்பல். கயல்-கண்களாகிய மீன்கள். (64) இதுவும் அது 296. | ஆறலைத ரங்கமுள அன்னநடை | | தாமுமுள ஆலைகமழ் பாகு முளவாய் வேறுமொரு பொன்னிவள நாடுசய துங்கன்முன் விதித்ததுவும் ஒக்கு மெனவே. | (பொ-நி.) தரங்கம் உள; அன்னநடைஉள; பாகும் உள. ஆய் வேறுமொரு பொன்னி வளநாடு சயதுங்கன் முன் விதித்தது ஒக்கும்; (எ-று.) (வி-ம்.) தரங்கம்-அலை (பெண்களின் வயிற்று மடிப்பு.) ஆலை- கரும்பாலை. பாகு-கரும்பின்பாகு போன்ற பெண்களின் சொல். சயதுங்கன்: குலோத்துங்கன். விதித்ததுவும்-ஏற்படுத்தியதும். (65) உடன்சென்ற யானைக்கூட்டத்தின் காட்சி 297. | வேழநிரை என்றமலை யெங்குமிடை | | கின்றஅயில் வென்றிஅப யன்ற னருளால் வாழஅப யம்புகுது சேரனொடு கூடமலை நாடடைய வந்த தெனவே. | |