பக்கம் எண் :

120கலிங்கத்துப்பரணி

     (பொ-நி.) வேழநிரை, எங்கும்மிடைகின்ற, அபயம்புகுது சேரனொடு
மலைநாடு அடைய வந்ததென; (எ-று.)

     (வி-ம்.)   வேழநிரை   -   யானைக்கூட்டம்.   மலை: உருவகம்.
மிடைகின்ற-நெருங்கிச் செல்வன. அயில் -வேல்.  வாழ - நல்வாழ்வு பெற,
அபயம்  - அடைக்கலம். புகுது - புகுந்த. அடைய - முற்றும்.  யானைகள்
நெருங்கியிருப்பன மலை நாடே வந்தது போன்றிருந்த தென்க.
                                                        (66)

இதுவும் அது

298.அக்கிரிகு லங்கள்விடும் அங்குலியின்
      நுண்திவலை அச்செழியர் அஞ்சி விடுமத்
திக்கிலுள நித்திலமு கந்துகொடு
     வீசியொரு தென்றல்வரு கின்றதெனவே.

     (பொ-நி.) கிரிகுலங்கள்  விடும்  திவலை  நித்தில  முகந்துகொடு
வீசி,தென்றல் வருகின்றதென; (எ-று.)

     (வி-ம்.) கிரிகுலம்-யானைக்கூட்டம். அங்குலி - துதிக்கையின் நுனி.
திவலை - நீர்த்திவலை, செழியர் - பாண்டியர். அத்திக்கு -தெற்குத் திக்கு.
நித்திலம் - முத்து. முகந்து - மொண்டு கொடு.  இடைக்குறை  (கொண்டு)
என - என்று சொல்லும்படி ஆக.                            (67)

 குலோத்துங்கன் தில்லைக் கூத்தனை வணங்கித்
திருவதிகை யடைந்தது

299.தென்றிசையி னின்றுவட திக்கின்முகம்
      வைத்தருளி முக்கணுடை வெள்ளி மலையோன்
மன்றினட மாடியருள் கொண்டு விடை
     கொண்டதிகை மாநகருள் விட்ட ருளியே.

     (பொ-நி.) வடதிக்கின் முகம் வைத்தருளி, மன்றின் நடமாடி அருள்
கொண்டு, விடைகொண்டு, அதிகை நகருள் விட்டருளி; (எ-று.)

     (வி-ம்.)முகம் வைத்தல்- முகம்நோக்கிப் புறப்படல். வெள்ளிமலை-
கைலைமலை.  மன்றில்  நடமாடி:  தில்லைக்கூத்தன்.  அதிகைமா  நகர்-
திருவதிகை என்னும் சிறந்த நகரம், விட்டருளி-சேனைகளோடு தங்கியருளி.
                                                       (68)