பக்கம் எண் :

அவதாரம்121


     
குலோத்துங்கன் கச்சியடைந்தமை

300.விட்டஅதி கைப்பதியி னின்றுபய
      ணம்பயணம் விட்டுவிளை யாடி அபயன்
வட்டமதி ஒத்தகுடை மன்னர்தொழ
     நண்ணினன்வ ளங்கெழுவுகச்சி நகரே.

     (பொ-நி.) அபயன்    அதிகைப்பதியினின்று,   பயணம்   பயணம்
விட்டுவிளையாடி மன்னர்தொழ, கச்சிநகர் நண்ணினன். (எ-று.)

     (வி-ம்.)   பயணம்,    பயணம்விட்டு   -   பயணப்பட்டும்.   பின்,
ஓரிடத்தைவிட்டும்;     பின்பயணப்பட்டும்.    மன்னர்   சிற்றரசர்   பலர்.
நண்ணினன்-அடைந்தான்; கெழுவு-பொருந்திய
                                                        (69)்

இங்ஙனம் கூறும் காளிதிரு முன்
கலிங்கத்துப் போர்கண்ட பேய் வந்தமை
 
301.என்னுமித நன்மொழி எடுத்திறைவி
      சொல்லுவதன் முன்னம்இகல் கண்ட தொருபேய்
தன்னுடைய கால்தனது பின்பட
     மனத்துவகை தள்ளிவர ஓடிவரவே.

     (பொ-நி.)   இறைவி   மொழி   எடுத்துச்   சொல்லுவதன்முன்னம்
இகல்கண்டதொரு பேய், கால்பின்பட, உவகை தள்ளிவர, ஓடிவர; (எ-று.)

     (வி-ம்.) என்னும் - காஞ்சி  அடைந்தான்  என்னும்,  இதநன்மொழி-
இதமான நல்மொழி.  இகல் - கலிங்கப்போர். பின் - முதுகு. மனத்துவகை-
மன மகிழ்வு: ஏழன்தொகை. தள்ளிவர-முன்னிட.                  (70)

    கலிங்கப்போர் கண்ட பேய் மொழிந்தது

302.கலிங்கர் குருதி குருதி
      கலிங்கம் அடைய அடைய
மெலிந்த வுடல்கள் தடிமின்
     மெலிந்த வுடல்கள் தடிமின்.