பக்கம் எண் :

122கலிங்கத்துப்பரணி

     (பொ-நி.)  கலிங்கம்  அடைய  அடைய  குருதி  குருதி  மெலிந்த
உடல்கள்தடிமின் (எ-று.)

     (வி-ம்.) குருதி - செந்நீர்.  அடைய - முழுதும்.  (எங்கும்.) தடிமின்-
பருக்குமாறு செய்க.                                        (71)

இதுவும் அது

303.உணங்கல் வயிறு குளிர உவந்து பருக பருக
 கணங்கள் எழுக எழுக கணங்கள் எழுக எழுக.

     (பொ-நி.) வயிறு குளிர,  பருக  பருக, எழுக  எழுக  எழுக எழுக;
(எ-று.)

     (வி-ம்.)  உணங்கல் - வற்றுதல். பருக - பருகவேண்டி.  கணங்கள்-
பேய்க்கூட்டங்களே. எழுக-புறப்படுக.                         (72)

இதுவும் அது

304.என்ெ்சயப் பாவி காளிங்
      கிருப்பதுஅங் கிருப்ப முன்னே
வன்சிறைக் கழுகும் பாறும்
     வயிறுகள் பீறிப் போன.

     (பொ-நி.)  பாவிகாள்!  இங்கிருப்பது  என்செய,  கழுகும்   பாறும்
முன்னே அங்கிருப்ப, வயிறுகள் பீறிப்போன; (எ-று.)

     (வி-ம்.) பாவிகாள் - பாவஞ்  செய்த  பேய்களே!  இங்கு - வறண்ட
பாலையில். அங்கு - கலிங்கத்தில். பாறு - பருந்து  வயிறுகள் பீறிப்போன-
வயிறு கிழிய (த்தின்றன.)                                  (73)

இதுவும் அது

305.வயிறுக ளென்னிற் போதா
      வாய்களோ போதா பண்டை
எயிறுக ளென்னிற் போதா
     என்னினும் ஈண்டப் போதும்.

     (பொ-நி.) வயிறுகள்  போதா; வாய்கள்  போதா; எயிறுகள் போதா
என்னினும், ஈண்டப் போதும்; (எ-று.)