பக்கம் எண் :

அவதாரம்123


     (வி-ம்.) போதா - போதமாட்டா; பற்றா. எயிறு - பற்கள். ஈண்டுதல்-விரைதல். போதும்-செல்வோம்.                               (74)

இதுவும் அது

306.சிரமலை விழுங்கச் செந்நீர்த்
      திரைகடல் பருகல் ஆகப்
பிரமனை வேண்டிப் பின்னும்
     பெரும்பசி பெறவும் வேண்டும்.

     (பொ-நி.)  விழுங்க,  பருகல்  ஆக,  வேண்டி, பசிபெற வேண்டும்;
(எ-று.)

     (வி-ம்.) சிரம்-தலை. செந்நீர்-குருதி. பிரமன்-நான்முகன். பெரும் பசி-மிக்கபசி;                                                 (75)  

அதுகேட்ட மற்றைப் பேய்கள் நிலை

307.என்ற வோசை தஞ்செவிக்
      கிசைத்தலும் தசைப்பிணம்
தின்ற போற்ப ருத்துமெய்
     சிரித்துமேல் விழுந்துமே.

     (பொ-நி.)  என்ற  ஓசை இசைத்தலும், தின்றபோல் பருத்து, சிரித்து,
மேல் விழுந்து; (எ-று.)

     (வி-ம்.) ஓசை - கலிங்கப்போர்  கண்ட  பேயின் பேச்சொலி. மெய்
பருத்து என இயைக்க. மேல்விழுந்து - ஒன்றன்மேல்  ஒன்றாக   விழுந்து. தசைப்பிணம் - சதையையுடைய பிணங்கள்.                    (76)

இதுவும் அது

308.ஓகை சொன்ன பேயின் வாயை
      ஓடி முத்த முண்ணுமே
சாகை சொன்ன பேய்க ளைத்த
     கர்க்க பற்கள் என்னுமே.

     (பொ-நி.) வாயை  முத்தம் உண்ணும்,  பற்கள்  தகர்க்க  என்னும்.
(எ-று.)