(வி-ம்.) ஓகை மகிழ்ச்சிச்செய்தி. முத்தம் உண்ணும் - முத்தங் கொடுக்கும். சாகை - பசியால் சாதலை. தகர்த்தல் - உடைத்தல். பற்கள்-பற்களை. (77) இதுவும் அது 309. | பிள்ளை வீழ வீழ வும்பெ ருந்து ணங்கை கொட்டுமே | | வள்ளை பாடி ஆடி ஓடி வாவெ னாவ ழைக்குமே. |
(பொ-நி.) துணங்கை கொட்டும், பாடி, ஓடி அழைக்கும்; (எ-று.) (வி-ம்.) பிள்ளை-கையில் இடுக்கியுள்ள பேயின் பிள்ளைகள், வீழவும்- கீழே வீழ்ந்துவிடவும். துணங்கை - பேய்க்கூத்து. வள்ளை உலக்கைப்பாட்டு. வா எனா-வருக என்று கூறி. அழைக்கும்-மற்றப் பேய்களையும் விளையாட அழைக்கும். (78) இதுவும் அது 310. | எனாஉ ரைத்த தேவி வாழி | | வாழி யென்று வாழ்த்தியே கனாஉ ரைத்த பேயி னைக்க ழுத்தி னிற்கொ டாடுமே. |
(பொ-நி.) வாழ்த்தி, கழுத்தினிற்கொடு ஆடும். (எ-று.) (வி-ம்.) எனா-குலோத்துங்கன் காஞ்சியில் வந்து தங்கினான் என்று. தேவி-காளி. உரைத்த-முன்பு உரைத்த. கொடு:இடைக்குறை: கட்டிக் கொண்டு. ஆடும்-கூத்தாடும். (79) கலிங்கத்துப்பேயைக் காளி போர்நிலை வினாயது 311. | ஆடிவரு பேய்களின் அலந்தலை | | தவிர்த்தடு பறந்தலை யறிந்த தனினின் றோடிவரு பேயைஇக லுள்ளபடி சொல்கென வுரைத்தன ளுரைத்த ருளவே. |
(பொ-நி.) தவிர்த்து பேயை இகல் சொல்க என உரைத்தனள். உரைத்தருள; (எ-று.) (வி-ம்.) பேய்கள் -போர்ச்செய்தி கேட்ட பேய்கள். அலந்தலை-நிலை கலங்கிய தன்மை. பறந்தலை-போர்க்களம். இகல்-போர். உரைத்து அருள- சொல்ல. (80) |