(பொ-நி.) உரைக்கஒண்ணாதேனும், சிறியேன், விண்ணப்பம் செய்யக்கேட்டருள்; (எ-று.) (வி-ம்.) ஒருவர்க்கு ஒருவாய்கொண்டு - ஒரே வாயினால் ஒண்ணாது என இயைக்க. செரு -போர். விண்ணப்பம் செய்ய-சிறிதளவு தெரிவிக்க. (2) காஞ்சியின் சிறப்பு 314. | பாரெ லாமுடை யான்அப யன்கொடைப் | | பங்க யக்கரம் ஒப்பெனப் பண்டொர்நாள்காரெ லாமெழுந் தேழரை நாழிகைக் காஞ்ச னம்பொழி காஞ்சிய தன்கணே. |
(பொ-நி.) அபயன்கரம் ஒப்பென, ஒருநாள் காரெலாம் காஞ்சனம் பொழி காஞ்சி அதன்கண்; (எ-று.) (வி-ம்.) பார் எலாம் - உலகம் யாவும். அபயன் - குலோத்துங்கன். பங்கயம் - தாமரை. கார் -மேகம். காஞ்சனம்-பொன். (3) குலோத்துங்கன் தங்கிய மாளிகை மண்டப இயல்பு 315. | அம்பொன் மேரு வதுகொ லிதுகொலென் | | றாயி ரங்கதிர் வெய்யவன் ஐயுறும் செம்பொன் மாளிகைத் தென்குட திக்கினில் செய்த சித்திர மண்டபந் தன்னிலே. |
(பொ-நி.) வெய்யவன் ஐயுறும் மாளிகை மண்டபம் தன்னில்; (எ-று.) (வி-ம்.) இது மாளிகையைக் குறித்தது. வெய்யவன்-ஞாயிறு. குடக்கு- மேற்கு. சித்திரமண்டபம். அழகிய மண்டபம். (4) வீற்றிருந்த இடச்சிறப்பு 316. | மொய்த்தி லங்கிய தாரகை வானின்நீள் | | முகட்டெ ழுந்த முழுமதிக் கொப்பென நெய்த்தி லங்கிய நித்திலப் பந்தரின் நின்று வெண்குடை ஒன்று நிழற்றவே. |
|