வீற்றிருந்த சிறப்பு 319. | பணிப்ப ணத்துறை பார்க்கொரு நாயகன் | | பல்க லைத்துறை நாவி லிருந்தவன் மணிப்ப ணிப்புயத் தேசிங்க வாகனி வந்து செந்திரு மாதொ டிருக்கவே. |
(பொ-நி.) நாயகன், இருந்தவன் புயத்தே சிங்க வாகனி திருமாதொடு இருக்க; (எ-று.) (வி-ம்.) பணி - பாம்பு (ஆதிசேடன்). பணம் - படம் (தலை) பார்- உலகம். இருந்தவன்-இருக்கப்பெற்றவன். மணி -இரத்தினம். பணி -அணிகள். சிங்கவாகனி-சிங்கஊர்தியையுடையவள்; வீரமகள். திருமாது-திருமகள். (8) தேவியர் உடன் இருந்தமை 320. | தரும டங்க முகந்து தனம்பொழி | | தன்பு யம்பிரி யாச்சயப் பாவையும் திரும டந்தையும் போல்பெரும் புண்ணியம் செய்த தேவியர் சேவித்தி ருக்கவே. |
(பொ-நி.) தனம்பொழி புயம் பிரியா தேவியர் சேவித்திருக்க; (எ-று.) (வி-ம்.) தரு - கற்பகத்தரு. மடங்க நாணித் தலை கவிழ. முகந்து- அள்ளி. தனம்- பொருள்.பொழிகின்ற புயம் என்க. தேவியர் மனைவிமார் (தியாகவல்லியும் ஏழிசை வல்லபியும்) சேவித்தல் - வணங்கல். (9) ஆடல்பாடல் மகளிர் சூழ்ந்திருந்தமை 321. | நாட காதி நிருத்த மனைத்தினும் | | நால்வ கைப்பெரும் பண்ணினும் எண்ணிய ஆடல் பாடலரம்பையர் ஒக்குமவ் வணுக்கி மாரு மநேக ரிருக்கவே. |
(பொ-நி.) நிருத்தம் அனைத்தினும், பண்ணிணும், எண்ணிய ஆடல் பாடல் அணுக்கிமாரும் அநேகர் இருக்க; (எ-று.) |