பக்கம் எண் :

130கலிங்கத்துப்பரணி

     (வி-ம்.) நாடகம்  -  நாட்டியம்;  (புறநடம்),  நிருத்தம் - தாண்டவம்.
நால்வகைப் பண் - பாலை,  குறிஞ்சி,  மருதம்,  முல்லை என்னும் பண்கள்.  அணுக்கிமார்-அணுகியிருப்போர்.                               (10)

சூதர், மாகதர், மங்கலப்பாடகர் புகழ்ப்பாடல்

322.சூதர் மாகதர் ஆதிய மாந்தரும்
      துய்ய மங்கலப் பாடகர் தாமும்நின்
பாத மாதர ராயவர் கட்கெலாம்
     பைம்பொன் மௌலி எனப்புகழ் பாடவே.

     (பொ-நி.) மாந்தரும்,  பாடகர்தாமும் "நின்பாதம் மௌலி" எனப்புகழ்
பாட; (எ-று.)

     (வி-ம்.) சூதர் - நின்று  ஏத்துவோர்.  மாகதர்- இருந்து ஏத்துவோர்.
ஆதரர்-நண்பு பூண்ட சிற்றரசர் (ஆதரம்-அன்பு). மௌலி-முடி.      (11)

இசைவல்லார் அருகு சூழ்ந்தமை

323.வீணை யாழ்குழல் தண்ணுமை வல்லவர்
      வேறு வேறிவை நூறுவி தம்படக்
காண லாம்வகை கண்டனம் நீயினிக்
     காண்டல் வேண்டு மெனக்கழல் போற்றவே.

     (பொ-நி.)   வல்லவர்;   "நூறு  விதம்படக்   கண்டனம்   காண்டல்
வேண்டும்," எனப் போற்ற; (எ-று.)

     (வி-ம்.) தண்ணுமை -மத்தளம், கண்டனம்-இசைகூட்டி அமைத்தோம்.
கழல்-திருவடிகள். (12)

குலோத்துங்கன் இசைப்பாடல் கேட்டதும் ஆராய்ந்து
குற்றங் கண்டதும்
 
324.தாள மும்செல வும்பிழை யாவகை
      தான்வ குத்தன தன்னெதிர் பாடியே
காள மும்களி றும்பெறும் பாணர்தம்
     கல்வி யில்பிழை கண்டனன் கேட்கவே.

     (பொ-நி.) பிழையாவகை  பாடி,  பெறும்  பாணர்தம்  கல்வியில்பிழை கண்டனன் கேட்க; (எ-று.)