பக்கம் எண் :

காளிக்குக்கூளி கூறியது131


     (வி-ம்.) செலவு-உலவிப்பாடுதல். தான்:குலோத்துங்கன், குலோத்துங்கன்
இசை நூல் இயற்றியிருந்தான் என்க. "சோழ குலசேகரன் வகுத்த  இசையி்ன்"
(தா.285) என வந்தது காண்க. காளம்-ஊதுகொம்பு.  கண்டனன்: முற்றெச்சம்.
(13)

சிற்றரசர்கள் குடைபிடித்துச் சாமரை வீசியது

325.வெங்க ளிற்றிலி ழிந்தபின் வந்தடி
      வீழ்ந்த மன்னவர் வெந்நிடு முன்இடு
தங்கள் பொற்குடை சாமரம் என்றிவை
     தாங்கள் தங்கரத் தால்பணி மாறவே.

     (பொ-நி.)  களிற்றினில்   இழிந்தபின்,  அடிவீழ்ந்த  மன்னவர்  தம்
கரத்தால், குடை சாமரம் என்றிவை பணி மாற; (எ-று.)

     (வி-ம்.) வெந்நிடுதல் - புறமுதுகிடுதல். இடு -போர்க்களத்தில் போட்டு விட்டுப்போன. பணிமாற-பணிவிடை செய்ய.                       (14)

சிற்றரசர் தேவிமார் சேடியராய் இருந்தமை

326.தென்ன ராதிந ராதிப ரானவர்
      தேவி மார்கள்தன் சேடிய ராகவே
மன்ன ராதிபன் வானவ ராதிபன்
     வந்தி ருந்தனன் என்னஇ ருக்கவே.

     (பொ-நி.) நராதிபரானவர் தேவிமார்கள் சேடியராக, ஆதிபன் இருக்க;
(எ-று.)

     (வி-ம்.)  தென்னர் - பாண்டியர். நராதிபர்  - அரசர்.  நராதிபரனவர்
தேவிமார்கள்; நான்கன்தொகை. தேவிமார்கள்-மனைவியர். சேடி-பணிப்பெண்.
மன்னர் ஆதிபன்-குலோத்துங்கன். வானவர்-ஆதிபன்-இந்திரன்.       (15)

மன்னர்கள் புறத்தே இருக்க, அகத்தே
அமைச்சரோடு இருந்தமை

327.மண்ட லீகரும் மாநில வேந்தரும்
      வந்து ணங்கு கடைத்தலை வண்டைமன்
தொண்டை மான்முதல் மந்திரப் பாரகர்
     சூழ்ந்து தன்கழல் சூடி இருக்கவே.