பக்கம் எண் :

132கலிங்கத்துப்பரணி

     (பொ-நி.) மண்டலீகரும்  வேந்தரும் கடைத்தலை  (இருக்க), மந்திரப்
பாரகர் தன்கழல் சூடி இருக்க; (எ-று.)

     (வி-ம்.)  மண்டலீகர் - நாட்டின்  பிரிவாகிய   மண்டலத்தலைவர்கள்.
மாநிலம்-மிக்க நாடு. வேந்தர்-பேரசர்.  உணங்குதல்-வருந்துதல். கடைத்தலை-
வாயில்.  ஆணைபெற்றன்றி  உள்ளே  புகமுடியாதாதலால்   உணங்குகடைத்
தலையாயிற்று.  "கடைத்தலை இருக்க"  என  "இருக்க"  என்பது  ஈரிடத்தும்
இயைந்தது; வண்டை-ஒரு நகரம். வண்டையன் ஆகிய தொண்டைமான் என்க.
தொண்டைமான்-கருணாகரத் தொண்டைமான். மந்திரப்பாரகர் - சூழ்ச்சிவல்ல
அமைச்சர். மந்திரம்-சூழ்ந்து என்க. பாரகர்-கரைகண்டவர். கழல்-பாதம். (16)      

மன்னர்கள் ஆணைபெற்று உள்புகுந்தமை

328.முறையி டத்திரு மந்திர வோலையாள்
      முன்வ ணங்கி முழுவதும் வேந்தர்தம்
திறையி டப்புற நின்றனர் என்றலும்
     செய்கை நோக்கிவந் தெய்தி யிருக்கவே.

     (பொ-நி.) முறையிட,  மந்திர  ஓலையாள்  வணங்கி,  வேந்தர் புறம்
நின்றனர் என்றலும், செய்கை நோக்கி வந்து எய்தி இருக்க; (எ-று.)

     (வி-ம்.)முறையிட - அரசர்கள்  முறையிட.  திருமந்திர  ஓலை ஆள்
அரசன் கட்டளைகளை எழுதி   நிறைவேற்றுவோன். முன் -குலோத்துங்கன்   முன். திறைஇட - கப்பம் செலுத்த. திறைமுழுவதும் என இயைக்க. செய்கை- உடன்பட்ட செய்கை. எய்தி-குலோத்துங்கனை எய்தி.             (17)

ஆங்குவந்து - சூழ்ந்த அரசர்கள்

329.தென்னவர் வில்லவர் கூபகர்
      சாபகர் சேதிபர் யாதவரே
கன்னடர் பல்லவர் கைதவர்
     காடவர் காரிபர் கோசலரே.

     (பொ-நி.) தென்னவர் ----------------------- கோசலர்; (எ-று.)

     (வி-ம்.) தென்னவர்  - பாண்டியர்.   வில்லவர் - சேரர்.   கூபகர் -
கொல்லமாண்டவர்.  கைதவர்  - பாண்டியகுலத்து   ஒருசாரார்.  காடவர் -
பல்லவகுலத்து ஒரு பிரிவினர்.                                  (18)