பக்கம் எண் :

156கலிங்கத்துப்பரணி

     (வி-ம்.) பண்ணுக  - அலங்கரிக்க;  கணிப்பு-அளவிடல.்  நண்ணுதல்-
நெருங்குதல்.  படைச் செருநர்- படைவீரர். செருக்களம்-போர்க்களம். இகல்-
போர்.                                                   (83)

கலிங்கப்படை எழுந்த ஆர்ப்புக் கூறியது

395.கலிங்கமவை யேழினு மெழுந்ததொரு
      பேரொலி கறங்குகட லேழு முடனே
மலங்கியெழு பேரொலி யெனத்திசை
     திகைப்புற வருந்தொனி யெழுந்த பொழுதே.

     (பொ-நி.) கலிங்கமேழினும்  எழுந்த  பேரொலி,  கடல்  ஏழும்  ஏழு
பேரொலியென, திசை திகைப்புற வரும், தொனி  எழுந்த  பொழுது; (எ-று.)

     (வி-ம்.) கலிங்க நாடு ஏழு  பிரிவாய்  அமைந்திருந்ததென்க.  கறங்கு கடல்- ஒலிக்கின்ற  கடல். மலங்குதல்-கலங்குதல்.  திசை;  இடவாகு  பெயர். திகைப்பு - திக்குமுக்காடிப் போதல். தொனி-ஓசை.               (84)

படை எழுச்சி கூறியது

396.தொளைமுக மதமலை யதிர்வன
      தொடுகடல் பருகிய முகிலெனவே
வளைமுக நுரையுக வருபரி
     கடலிடை மறிதிரை யெனவெழவே.

     (பொ-நி.) மதமலை  அதிர்வன,  முகிலென ( எழ), வருபரி மறி திரை
என எழ; (எ-று.)

     (வி-ம்.)   தொளை   முகம்  -  முகத்தே   தொளை    பொருந்திய துதிக்கையுடையது. மதமலை -யானை. அதிர்வன முகிலென்று   தோன்றும்படி (போர்க்கு)  எழுந்தன  என்க.  வளை  முகம் - வளைந்த வாய். பரி-குதிரை.
மறிதல்-சுருண்டு விழுதல். திரை-அலை. எழ-(போர்க்கு) எழ.
                                                        (85)

இதுவும் அது

397.இடையிடை யரசர்கள் இடுகுடை
      கவரிகள் இவைகடல் நுரையெனவே
மிடைகொடி பிறழ்வன மறிகடல்
     அடையவும் மிளிர்வன கயலெனவே.