பக்கம் எண் :

காளிக்குக்கூளி கூறியது157


     (பொ-நி.) குடை, கவரிகள், இவை  கடல் நுரை என, கொடி பிறழ்வன,
மிளிர்வன கயல் என; (எ-று.)

     (வி-ம்.) அரசர்கள் இடுகுடை: நான்கன் தொகை.  இடுகுடை-அணிபெற
இட்ட குடைகள். கவரிகள்-வெண்சாமரைகள்.  மிளிர்வன ஆகிய கயல் என்க.
குடைகளும்   கவரிகளும்  கடல்நுரையையொத்தன;  மிடைகொடி-நெருங்கிய
கொடிகள்;  பிறழ்வன-அசைவன.  கொடிகள்  பிறழ்கின்ற மீன்கள் யொத்தன
என்க.                                                   (86)

இதுவும் அது

398.அலகினொ டலகுகள் கலகல
      எனுமொலி அலைதிரை ஒலியெனவே
உலகுகள் பருகுவ தொருகடல்
     இதுவென உடலிய படை எழவே.

     (பொ-நி.) கலகல எனும் ஒலி திரைஒலி என, படை. கடல் இது  என எழ, (எ-று.)

     (வி-ம்.) அலகு-வேல் வாள்  முதலிய  படைக்கலங்கள். கலகல: ஒலிக்
குறிப்பு.    திரை-கடல்;   அலை.   உலகுகள்    பருகுவதொரு    கடல்-
ஊழிக்காலத்தெழுங்கடல். உடலுதல்-மாறுபட்டெழுதல்.             (87)

இதுவும் அது

399.விசைபெற விடுபரி இரதமும்
      மறிகடல் மிசைவிடு கலமெனவே
இசைபெற உயிரையும் இகழ்தரும்
     இளையவர் எறிசுற வினம் எனவே.

     (பொ-நி.) இரதமும்,  கடல்மிசைவிடு  கலமென,  இளையவர் சுறவினம் என; (எ-று.)

     (வி-ம்.) விசை பெற-விரைவு  கொள்ள.  பரி-குதிரை. மிசைவிடு-மேலே
விட்ட.  கலம் - மரக்கலம்.   உயிரையும்  இகழ்தரும் - தம்  உயிரைக்கூடப்
பொருட்படுத்தாத.  இதனைச்,  'சுழலும்  இசைவேண்டி  வேண்டா  உயிரார்'
என்பர், வள்ளுவர். இளையவர்-வீரர்கள். சுறவு-சுறாமீன். இனம்-கூட்டம். 
                                                        (88)