பக்கம் எண் :

158கலிங்கத்துப்பரணி

இதுவும் அது

400.விடவிகள் மொடுமொடு விசைபட
      முறிபட வெறிபட நெறிபடவே
அடவிகள் பொடிபட அருவிகள்
     அனல்பட அருவரை துகள்படவே.

     (பொ-நி.) விடவிகள்  முறிபட,  எறிபட, நெறிபட அடவிகள் பொடிபட,
அருவிகள் அனல்பட, அருவரை துகள்பட; (எ-று.)

     (வி-ம்.) விடவி-மரம்.  மொடுமொடு:  ஒலிக்குறிப்பு. விசைபட-விரைந்து.
எறிபட-அழிய.  மரங்கள்  முறிபடவும்  எறிபடவும்  என்க.  நெறி-வழி. பட-
உண்டாக. அடவி-காடு.  அருவிகள்-ஆறுகள். அனல்பட-நெருப்பின் தன்மை
பெற வெப்பப் பட.வரை-மலை. துகள்பட -பொடியாக நொறுங்க.      (89)

இதுவும் அது

401.அறைகழல் இளையவர் முறுகிய
      சினவழல் அதுவட வனலெனவே
முறைமுறை முரசுகள் மொகுமொகு
     வதிர்வன முதிர்கடல் அதிர்வெனவே.

     (பொ-நி.) இளையவர் சின அழல், வடஅனல் என, முரசுகள் அதிர்வன
கடல் அதிர்வென ; (எ-று.)

     (வி-ம்.) அறை கழல்-ஒலிக்கும் வீரக்கழல்.  இளையவர்-வீரர். முறுகிய-
மிகுந்த. சின அழல்-கோபத் தீ. வட அனல்-வடவைத் தீ. அதிர்வு -முழக்கம்.
முதிர்-பழைமையான; பெரிய.                                 (90)

இதுவும் அது

402.ஒருவர்த முடலினில் ஒருவர்தம்
      உடல்புக உறுவதோர் படியுகவே
வெருவர மிடைபடு நடுவொரு
     வெளியற விழியிட அரிதெனவே.