பக்கம் எண் :

159


     (பொ-நி.) உடலில்  உடல்  புக,  படி  உக, மிடை படை நடு விழி
இட அரிதென, வெளி அற; (எ-று.)

     (
வி-ம்.) படி-உலகம்.  உக-அழிய.  உக மிடை படை என்க. வெருவர-
கண்டோர்)  அச்சம்  பொருந்த.  மிடைதல்  நெருங்குதல். வெளி-வெற்றிடம்.
விழி இட அரிது -(வெற்றிடத்தைக்)கண்ணால் காணல் அரிது.          (91)

போர்க்கெழுதல் கூறியது

403.வெளியரி தெனவெதிர் மிடைபடை
      மனுபரன் விடுபடை யதனெதிரே
எளிதென இரைபெறு புலியென
     வலியினொ டெடுமெடு மெடுமெனவே.

     (பொ-நி.) மிடைபடை, விடுபடையதன்  எதிரே,  எளிதென, புலியென,
எடும் எடும் எடும், எனவே, (எ-று.)

     
(வி-ம்.) வெளி-இடைவெளி.  எதிர்படை:  வினைத்தொகை. மிடைதல்-
நெருங்குதல். மனுபரன்: குலோத்துங்கன்: மக்களுக்குட் சிறந்தவன்.   (92)

12. போர் பாடியது

     [போர்க் காரணத்தைக்   கூறிய   கலிங்கப்  பேய்,    போரைக்கூறத்
தொடங்குகின்றது. எங்கும்போர் முழக்கம் மண்டியது. நால்வகைப்  படைகளும்
தந்தம்   எதிர்நின்று   பொருதன.   அரசரோ  டரசர்   பொருதனர்.  சிலர்
யானையொடு பொருதனர். விற்படை கொண்டு, பொருதவீரர் பலர். கலிங்கவீரர்
கேடகங்கொண்டு தாங்கினர். உலக்கை  கொண்டு பொருதோர்  பலர். சக்கரம்
கொண்டு    பொருதோர்   பலர்.    குதிரையொடு    பொருதோர்   பலர்.
வாட்போருடற்றிஇருவரும்    ஒருவராய்   வீழ்ந்தோர்   பலர்.  வீரர்  சிலர்
யானை வீரரொடு பொருவர்;   படை  இழந்த  பலர்   எறிந்த  படைகளைப் 
பறிப்பர்.   இங்ஙனம் இருதிறத்துப்   படையும்   பொரவும் செருமுதிரவும்,
கருணாகரன்   தன்   யானையை முந்துறச்    செலுத்தினன்.  இவ்வளவில்
இருபடைகளும்   தாம்   தாம்   பரந்துபட்டு நின்று  பொருதநிலை மாறி, 
ஒருமுகப்பட்டு   நின்று  பொருது,  தாம்  தாம் வென்றியைக் காண முந்தின.
பிணமலை பெருகியது.