இதுவும் அது 405. | வெருவர வரிசிலை தெரித்தநாண் | | விசைபடு திசைமுகம் வெடிக்கவே செருவிடை அவரவர் தெழித்ததோர் தெழிஉல குகள்செவி டெடுக்கவே. |
(பொ-நி.) தெரித்த நா(ணால்) திசைமுகம் வெடிக்க, தெழி(யால்) உலகுகள் செவிடெடுக்க; (எ-று.) (வி-ம்.) வெருவருதல்-அச்சம் விளைதல். வரி சிலை-கட்டமைந்த வில். நாண்-நாணோசை(யால்)நாண்விசை: ஆறன் தொகை. முகம்-இடம். செரு-போர். அவர்-வீரர். தெழித்தல்-அதட்டுதல்; தெழி-ஒலியால். செவிடெடுக்க-செவிடுபட. (2) இருபடைகளும் கைகலந்தமை 406. | எறிகட லொடுகடல் கிடைத்தபோல் | | இருபடை களுமெதிர் கிடைக்கவே மறிதிரை யொடுதிரை மலைத்தபோல் வருபரி யொடுபரி மலைக்கவே. |
(பொ-நி.) இருபடைகளும், கடலொடு, கடல் கிடைத்தபோல், எதிர்கிடைக்க, பரியொடு பரி, திரையொடு திரைமலைத்த போல், மலைக்க; (எ-று.) (வி-ம்.) எறிதல் - அலைவீசுதல். கிடைத்தல் - அகப்படுத்தப்படுதல். கிடைக்க-எதிர்க்க. மறிதல் - சுருண்டு வீழ்தல். திரை-அலை. மலைத்தல்-போர் செய்தல், பரி -குதிரை. (3) யானைப்படையும் தேர்ப்படையும் மலைந்தமை 407. | கனவரை யொடுவரை முனைத்தபோல் | | கடகரி யொடுகரி முனைக்கவே இனமுகில் முகிலொடு மெதிர்த்தபோல் இரதமொ டிரதமும் எதிர்க்கவே. |
(பொ-நி.) கரியொடு கரி. வரையொடு வரைமுனைத்தபோல் முனைக்க, இரதமோ டிரதமும், முகில் முகிலொடு மெதிர்த்தபோல் எதிர்க்க; (எ-று.) |