(வி-ம்.) வரை - மலை. முனைத்தல் -போர்புரிதல். கரி-யானை.முகில்- மேகம். இரதம்-தேர்ப்படை. (4) வீரர்களும் அரசர்களும் மலைந்தமை 408. | பொருபுலி புலியொடு சிலைத்தபோல் | | பொருபட ரொடுபடர் சிலைக்கவே அரியினொ டரியினம் அடர்ப்பபோல் அரசரும் அரசரும் அடர்க்கவே. |
(பொ-நி.) படரொடு படர் புலியொடு புலி சிலைத்தபோல் சிலைக்க, அரசரும் அரசரும் அரியினொடரியினம் அடர்ப்பபோல் அடர்க்க; (எ-று.) (வி-ம்.) சிலைத்தல்-ஆர்த்துப்பொருதல். படர்-படைவீரர். அரி-சிங்கம். அடர்த்தல்-நெருங்கிப் பொருதல். (5) போரின் கடுமை 409. | விளைகனல் விழிகளின் முளைக்கவே | | மினலொளி கனலிடை எறிக்கவே வளைசிலை யுருமென இடிக்கவே வடிகணை நெடுமழை படைக்கவே. |
(பொ-நி.) விழிகளின் கனல் முளைக்க, கனலிடை ஒளி எறிக்க, சிலை இடிக்க, கணை மழை படைக்க; (எ-று.) (வி-ம்.) கனல்-சினத்தீ. மினல் ஒளி-மின்னல்போன்ற ஒளி. சிலை-வில். உரும்-இடி. வடி-கூர்மை. கணை-அம்பு. படைக்க-உண்டாக்க. வீரர் விழிகளில் தோன்றிய கனலில் மின்னலொளி தோன்றிய தென்க. வில் இடியையுண்டாக்க. அம்பு மழையையுண்டாக்கின வென்க. (6) குருதியாற்றியல்பு 410. | குருதியின் நதிவெளி பரக்கவே | | குடையினம் நுரையென மிதக்கவே கரிதுணி படுமுடல் அடுக்கியே கரைஎன இருபுடை கிடக்கவே. |
|