பக்கம் எண் :

போர் பாடியது163


     (பொ-நி.) குருதியின் நதி பரக்க,  குடை இனம் நுரைஎன மிதக்க, கரி
உடல் இருபுடை கரை என, கிடக்க; (எ-று.)

     (வி-ம்.) குருதி-செந்நீர். வெளி-வெற்றிடமெல்லாம்.  பரக்க-பரவிப்பாய.
குடை-வெண்கொற்றக்குடை. கரி-யானை. துணித்தல்-வெட்டுதல். புடை-பக்கம்.
வெட்டப்பட்ட   யானையுடல்கள்  குருதியாற்றின்   இருபுறமும்  கரையைப்
போன்றுகிடந்தன வென்க.                                     (7)

யானைப் போர்

411.மருப்பொடு மருப்பெதிர் பொருப்பிவை
      எனப்பொரு மதக்கரி மருப்பி னிடையே
நெருப்பொடு நெருப்பெதிர் சுடர்ப்பொறி
     தெறித்தெழ நிழற்கொடி தழற்க துவவே.

     (பொ-நி.)   பொருப்பு  இவை  என  பொரு,  கரி  மருப்பினிடையே,
நெருப்பொடு எதிர் நெருப்பு, சுடர்ப்பொறி, தெறித்து எழ, கொடி, தழல் கதுவ;
(எ-று.)

     (வி-ம்.) மருப்பு-யானைத்தந்தம்.  பொருப்பு-மலை. கரி-யானை. கொடி-
கொடிச்சீலைகள்.  தழல்-தீ. கதுவ-பற்றிக்கொள்ள,  குருதி தோய்ந்த யானைத்
தந்தத்துக்கு  நெருப்பை  உவமையாக்குக.   யானைப்போரில்   தோன்றிய
நெருப்பால் கொடிச்சீலைகள் தீப்பற்றின என்க.                    (8)

இதுவும் அது

412.நிழற்கொடி தழற்கது வலின்கடி
      தொளித்தவை நினைப்பவர் நினைப்ப தன்முனே
அழற்படு புகைக்கொடி எடுத்தன
     புதுக்கொடி அனைத்தினு நிரைத்த தெனவே.

     (பொ-நி.) கொடி,  தழல்  கதுவலின்  ஒளித்தவை, நினைப்பதன்முனே,
புதுக்கொடி நிரைத்ததென புகைக்கொடி எடுத்தன; (எ-று.)

     (வி-ம்.) நிழல்கொடி-நிழலைத்  தரும்  கொடி. தழல்-நெருப்பு கதுவல்-
பற்றுதல். ஒளித்தவை-இருந்த  இடம்  தெரியாமல்  மறைந்தவை.  அழல்-தீ.
புகைக்கொடி   -  புகையாகியகொடிகள்.   அனைத்தினும்  -  எவ்விடத்தும் துகிற்கொடிகள் மறைந்து புகைக்கொடிகள் தோன்றின என்க.          (9)