மருப்பு-(இற்ற) தந்தங்கள்.சயமகள்-வெற்றித் திருமகள். களபம்-கலவைச் சாந்து மார்பில் முறிந்து தங்கிய தந்தம் முலைக்குறி ஒத்ததென்க. (14) குதிரைவீரர் யானைப்படையை அழித்தமை 418. | சயமகள் களபமு லைக்கணி யத்தகு | | தனிவடம் இவையென மத்தக முத்தினை அயம்எதிர் கடவிம தக்கரி வெட்டினர் அலைபடை திரைகள்க ளத்துநி ரைக்கவே. | (பொ-நி.) படைநிரைகள் நிரைக்க அயம் கடவி முலைக்கு அணியத்தகும் வடம் இவை என, மதக்கரி முத்து மத்தகத்தினை வெட்டினர்; (எ-று.) (வி-ம்.) வடம்-(முத்து) மாலை. முத்து மத்தகத்தினை என இயைக்க. அயம்-குதிரை. கடவி-செலுத்தி. கரி-யானை. அலை-கடல். நிரை-வரிசை. நிரைக்க-பரந்துகிடக்க. மதக்கரி மத்தகத்தினை வெட்டியபோதுதிர்ந்த முத்து வரிசைகள் முத்து மாலையை ஒத்தவென்க. (15) போர்க்களம் தீயில் மூழ்கியது 419. | அலைபடை நிரைகணி ரைத்தசெ ருக்களம் | | அழல்புரி களமென ஒப்பில விற்படை தலைபொர எரியநெ ருப்பினின் மற்றது தழல்படு கழைவனம் ஒக்கினு மொக்குமே. | (பொ-நி.) செருக்களம் அழல்புரி களம் என, விற்படை தலைபொர, (அவை) நெருப்பினின் எரிய, அது தழல்படு கழைவனம் ஒக்கும்; (எ-று.) (வி-ம்.) அலை-கடல். அழல்-தீ. புரிதல்-உண்டுபண்ணுதல். களம்-இடம். தலை - வீரர்கள் தலை. அத்தலைகள் எரிய என்க. அது -அப்போர்க்களம். தழல் - நெருப்பு. கழை - மூங்கில். அம்பு தலையைப் பொர எழுந்த நெருப்பால் தலைகள் எரிய, தீப்பற்றிய மூங்கிற்காட்டை ஒத்ததென்க. (16) |