விற்போர் 420. | தழல்படு கழைவனம் எப்படி அப்படி | | சடசட தமரமெ ழப்பக ழிப்படை அழல்படு புகையொடி ழிச்சிய கைச்சிலை அடுசிலை பகழிதொ டுத்துவ லிப்பரே. |
(பொ-நி.) இழிச்சிய கைச்சிலை பகழிப்படை. தமரம்எழ, சிலைபகழி தொடுத்து வலிப்பர்; (எ-று.) (வி-ம்.) தழல்-தீ. கழை-மூங்கில். தமரம்-ஒலி. பகழி-அம்பு. அழல்-தீ. இழிச்சிய-புறப்பட்ட. இழிச்சிய பகழிப்படை என்க. சிலை-வில். வலித்தல்- இழுத்துவிடுதல். எரியும் மூங்கிற்காட்டில் ஒலி உண்டாமாறுபோல, ஒலியுண்டாகப் பகழி தொடுத்து வலிப்பர் என்க. (17) வெட்டுண்ட வில்வீரர் இயல்பு 421. | அடுசிலை பகழிதொ டுத்துவி டப்புகும் | | அளவினில் அயமெதிர் விட்டவர் வெட்டின உடல்சில இருதுணி பட்டன பட்டபின் ஒருதுணி கருதுமி லக்கைய ழிக்குமே. |
(பொ-நி.) பகழி விடப்புகும் அளவினில், வெட்டின உடல்சில, இருதுணி பட்டன; பட்டபின் ஒருதுணி இலக்கை அழிக்கும்; (எ-று.) (வி-ம்.) அடு - கொல்லுகின்ற. சிலை- வில். பகழி - அம்பு. அயம் எதிர்விட்டவர் - குதிரைகளை எதிர் செலுத்திவந்தவீரர்கள். துணி - துண்டம். இலக்கு-தாம் வெட்டுறாததற்குமுன் மனத்திற் கொண்ட இலக்கு. அம்பு வலித்த அளவில் வெட்டுண்ட வில்வீரனின் உடற்குறைகளும் தம் பண்டை இலக்கை அழிக்கப்புகுந்தன வென்க. அஃதாவது தாம் குறித்தவற்றை வெட்டப்புகும்போது வெட்டுற்ற வீரர்களின் உடலின் ஒரு பகுதி தவறாது வெட்டி முடித்ததென்க. (18) அவர் வில்லின் செயல் 422. | ஒருதுணி கருதுமி லக்கைய ழித்தன | | உருவிய பிறைமுக அப்பக ழித்தலை அரிதரி திதுவுமெ னப்பரி யுய்ப்பவர் அடியொடு முடிகள் துணித்துவி ழுத்துமே. |
|