பக்கம் எண் :

168கலிங்கத்துப்பரணி

     (பொ-நி.)  ஒரு துணி இலக்கை அழித்தன;  (அவர்கள்)  பகழித்தலை,
பரி உய்ப்பவர் அடியொடு முடிகள் துணித்து விழுத்தும்; (எ-று.)

     (வி-ம்.) துணி-உடல் துண்டம்.  உருவிய-வில்லிலிருந்து உருவிச்சென்ற.
பிறைமுகம்: அம்பின் ஒருபுறம் பிறை போன்றது. அப்பகழி-வில் வீரர் விட்ட
அவ்வம்பு. தலை - நுனி. என - என்று  கண்டார் சொல்ல. பரி உய்ப்பவர்-
தம்முன் குதிரையைச் செலுத்திவந்தோர். அடி - கால். முடி-தலை. துணித்தல்-துண்டாக்கல். உடலின் ஒரு துண்டம் கருதிய இலக்கை அழிக்க அவர் விட்ட அம்பு,  தம்மை வெட்டிய  குதிரை  வீரரின்  கால்களையும்  தலைகளையும் துணித்தன வென்க.
                                                         (19)

குதிரைவீரர் செயல்

423.அடியொடு முடிகள்து ணித்துவி ழப்புகும்
      அளவரி தொடைசம ரத்தொட ணைத்தனர்
நெடியன சிலசரம் அப்படி பெற்றவர்
     நிறைசரம் நிமிரவி டத்துணி யுற்றவே.

     (பொ-நி.)  விழப்புகும்  அளவு, அரிதொடை, அணைத்தனர்; நெடியன சரம் பெற்றவர் நிறைசரம் நிமிரவிட துணியுற்றன; (எ-று.)

     (வி-ம்.) அடியொடு முடி-கால்களுடன் தலைகள் விழ-கீழே விழ. அரி
தொடை - தாங்கள்  கால்  தலைகளை  அரிந்த  தொடை(அம்பு).  சமரம்-
போர்த்திறமை. சரம்-அன்பு. நிறைசரம்-(கூர்மை) நிறைந்த சரம். நிமிரவிடுதல்-
உயரவிடுதல். துணியுற்றன - எதிர்நின்ற வீரர் உடல்கள் துணியுற்றன. தங்கள்
தலைகால்களைத் துணித்த அம்புகளுள் நீண்ட. அம்புகளைக் கொண்டு எதிர்
வீரர்களைக் கொன்றார் குதிரை வீரர் என்க.                    (20)

குதிரைவீரரால் அழிந்தோர் செயல்

424.நிறைசரம் நிமிரவி டத்துணி உற்றவர்
      நெறியினை ஒடியெறி கிற்பவ ரொத்தெதிர்
அறைகழல் விருதர்செ ருக்கற வெட்டலின்
     அவருடல் இருவகிர் பட்டன முட்டவே.

     (பொ-நி.) நிமிரவிட, துணி உற்றவர், ஒடி எறிகிற்பவர் ஒத்து, விருதர்
செருக்கு அற வெட்டலின், உடல் முட்டவகிர்பட்டன; (எ-று.)