பக்கம் எண் :

போர் பாடியது169


     (வி-ம்.) விட - குதிரைவீரர் விட. துணியுற்றவர் - உடல்  துண்டுபட்ட வாள்வீரர். நெறி-வழி. ஒடி-புதர்கள். எறித்தல்-அழித்தல். எதிர்-தம்முன்னுள்ள.
கழல் - வீரக்கழல். விருதர் - வீரர்; விருது  பெற்றவர். செருக்கு - இறுமாப்பு.
வெட்டலின் - அவ் வீரரை வெட்டலின். அவர் - அவ்வீரர்கள். வகிர்-பிளவு.
முட்ட-முடிய. குதிரைவீரர் நெடுஞ் சரத்தால் உடல் துணியுற்ற வீரர் புதர்களை
அழிப்பது போன்று, தம்முன்னின்ற வீரர் தொகுதிகளை அழித்தனர் என்க.
                                                          (21)

கலிங்கவீரர் செயல்

425.விடுத்த வீர ராயு தங்கள்
      மேல்வி ழாம ேநிரைத்
தெடுத்த வேலி போற்க லிங்கர்
     வட்ட ணங்கள் இட்டவே.

     (பொ-நி.) ஆயுதங்கள் மேல் விழாமலே நிரைத்து, எடுத்த வேலிபோல்,
கலிங்கர் வட்டணங்கள் இட்ட; (எ-று.)

     (வி-ம்.) விடுத்த-சோழவீரர் விடுத்த. நிரை-வரிசை. எடுத்த வேலிபோல்-
கட்டிய மதில்போல. வட்டணங்கள்-கேடகங்கள். இட்ட-தோன்றி நின்றன.
                                                          (22)

கலிங்கர் கேடகங்கள் துளைபட்டமை

426.ட்ட வட்ட ணங்கண் மேலெ
      றிந்த வேல்தி றந்தவாய்
வட்ட மிட்ட நீள்ம திற்கு
     வைத்த பூழை ஒக்குமே.

     (பொ-நி.)  வட்டணங்களின்மேல்,  வேல்  திறந்த  வாய்,  நீண்மதிற்கு
வைத்த பூழை ஒக்கும்; (எ-று.)

     (வி-ம்.) வட்டணம் - கேடகம். எறிந்த -சோழவீரர் எறிந்த. வாய்-இடம்.
வட்டம் இட்ட-வளைவாக அமைத்த. பூழை-சிறிய வாயில்.
                                                         (23)