பக்கம் எண் :

170கலிங்கத்துப்பரணி

வாட்படையும் உலக்கைப்படையும்கொண்டு பொருதமை

427.கலக்க மற்ற வீரர் வாள்க
      லந்த சூரர் கைத்தலத்
துலக்கை உச்சி தைத்த போது
     ழுங்க லப்பை ஒக்குமே.

     (பொ-நி.) வீரர் வாள், உலக்கை  உச்சி  தைத்தபோது ,உழுங்கலப்பை
ஒக்கும்; (எ-று.)

     (வி-ம்.)  கலக்கம் - அச்சம்.  கலந்த - (மாறுபட்டுக்கைகலந்த)  சூரர்-
படைவீரர். தலம்-இடம். உழும்-கலப்பை-உழுகின்ற கலப்பைகள்.       (24)

துணிந்து வீழ்ந்த யானைத் துதிக்கைநிலை

428.மத்த யானை யின்க ரம்சு
      ருண்டு வீழ வன்சரம்
தைத்த போழ்தின் அக்க ரங்கள்
     சக்க ரங்க ளொக்குமே.

     (பொ-நி.)  யானையின்  கரம் சுருண்டு  வீழ, சரம் தைத்த போழ்தின்,
அக்கரங்கள் சக்கரங்கள் ஒக்கும்; (எ-று.)

     (வி-ம்.) மத்தம் - மதகுணம். கரம் - துதிக்கை.  சரம்-அம்பு. சுருண்டு-
சுருண்டுகொண்டு.                                          (25)

யானை மத்தகம் பிளந்தமை

429.வெங்க ளிற்றின் மத்த கத்தின்
      வீழு முத்து வீரமா
மங்கை யர்க்கு மங்க லப்பொ
     ரிச்சொ ரிந்த தொக்குமே.

     (பொ-நி.)  மத்தகத்தின்  வீழும்  முத்து,  பொரி  சொரிந்த தொக்கும்;
(எ-று.)

     (வி-ம்.) மத்தகத்தின்-மத்தகத்தினின்றும்,  வீர  மா  மங்கையர்-வெற்றி
மடந்தையர். வீரமங்கையரை வீரர் போர்க்களத்தில் மணம்  புரிந்தனர் என்க.
மங்கலம் - மணவினை பொரி -நெற்பொரி (மணக்காலத்துச் சொரியப்படுவது).
வீரர்யானை மத்தகத்தைப்பிளந்ததால் முத்துக்கள் சிந்தின என்க.    (26)