(வி-ம்.) கவந்தம்-குறைஉடல். தம் முன்பு என இயைக்க. தம்-பேய்தம். நிவப்பு-உயர்வு. ஆட்டுவிக்கும்-ஆடப் பழக்குகின்ற. நித்தகாரர்-நிருத்தகாரர்: ஆட்டுவிப்போர். (29) யானை குதிரை ஒட்டகம் திரியுநிலை 433. | ஒட்ட கங்கள் யானை வாலு | | யர்த்த மாஅ ழிந்தபோர் விட்ட கன்று போகி லாது மீள்வ போலும் மீளுமே. |
(பொ-நி.) ஒட்டகங்கள், யானை, மா, போர்விட்டு, போகிலாது, மீள்வபோலும் மீளும்; (எ-று.) (வி-ம்.) வால் உயர்த்த மா - குதிரை. அழிந்த போர்-பலரும் பட்ட போர்க்களம். அகன்று போகிலாது - நீங்கிச் சொல்லாமல். மீள்வபோலும்- மீண்டும் பொரும்போலும். தம்மீது ஏறிச் செலுத்தியோர் பட்டமையின், அவை நெறியின்றித்திரிந்தன வென்க. (30) குருதி வெள்ளத்தில் பட்டு வீழ்ந்த யானையின் இயல்பு 434. | பிறங்கு சோரி வாரி யிற்பி | | ளிற்றி வீழ்க ளிற்றினம் கறங்கு வேலை நீரு ணக்க விழ்ந்த மேகம் ஒக்குமே. |
(பொ-நி.) சோரி வாரியில் வீழ் களிற்றினம், வேலை நீர் உண, கவிந்த மேகம் ஒக்கும்; (எ-று.) (வி-ம்.) பிறங்குதல் - நிறம் விளங்குதல். சோரி - குருதி. வாரி-கடல். பிளிற்றுதல்-வீறிடுதல். களிறு-யானை. கறங்குதல்-ஒலித்தல். வேலை-கடல்; கவிழ்ந்த-படிந்த.` (31) யானையின் துதிக்கை துணித்தோர் இயல்பு 435. | வாளில் வெட்டி வார ணக்கை | | தோளில் இட்ட மைந்தர்தாம் தோளில் இட்டு நீர்வி டுந்து ருத்தி யாளர் ஒப்பரே. |
|