(பொ-நி.) வாரணக்கை வெட்டி, தோளில் இட்டமைந்தர் துருத்தியாளர் ஒப்பர்; (எ-று.) (வி-ம்.) வாளில்-வாளால். வாரணம்-யானை. கை-துதிக்கை. தோளில் இட்ட-தம் தோள்களில் கொண்ட. மைந்தர்-வீரர். துருத்தி-நீர் நிறைத்து ஒழுக்கும் பெருங்குழாய். (32) அம்பு தொளைத்த வில்லோர் இயல்பு 436. | நேர்முனையில் தொடுத்த பகழிகள் | | நேர்வளையில் சுழற்று மளவினில் மார்பிடையில் குளித்த பகழியை வார்சிலையில் தொடுத்து விடுவரே. |
(பொ-நி.) பகழிகள் நேர்; வில் சுழற்றும் அளவினின், மார்பிடையில் குளித்த பகழியை, சிலையில் தொடுத்து விடுவர்; (எ-று.) (வி-ம்.) நேர் - தனக்கு நேர்; எதிர்தலுமாம். முனை - போர்முனை தொடுத்த - பகைவீரன் தொடுத்த. பகழி - அம்பு. பகழிகள் நேர் - பகழிகளுக்கு நேர் வளைவில் - வளைந்த வில். தம்மிடம் தொடுத்துவிட அம்பின்மையின், பகை அம்பைத்தடுக்கத் தம் வில்லைச் சுழற்றினர் என்க. குளித்த - தைத்த. பகழி-அம்பு. வார்-நீட்சி. (33) குதிரையை வீழ்த்திய வீரர் இயல்பு 437. | அசையஉரத் தழுத்தி இவுளியை | | அடுசவளத் தெடுத்த பொழுதவை விசையமகத் தெடுத்த கொடியென விருதர்களத் தெடுத்து வருவரே. |
(பொ-நி.) விருதர், சவளத்து, இவுளியை உரத்து அழுத்தி, எடுத்தபொழுது, அவை கொடி என, எடுத்து வருவர்; (எ-று.) (வி-ம்.) அசைய-வருந்த. உரம்-மார்பு. அழுத்தி-குத்தி. இவுளி-குதிரை. அடுதல்-கொல்லுதல். சவளம்-ஈட்டி. எடுத்தல்-தூக்கிப்பிடித்தல். விசைய மகள்- வெற்றிமகள் கொடி என - கொடி என்று கூறும்படி. என - என்று கண்டோர் சொல்ல. விருதர்-வீரர். களம்-போர்க்களம். (34) |