(பொ-நி.) சிலர், புகர்முகம் மிசை அடி இட்டு, அதில்பகை விருதரை சிரத்தை அரிவர்; அச் சிரம் விழுபொழுது அறை எனும் ; (எ-று.) (வி-ம்.) பொருநர்-வீரர். உரம்-மார்பு. கவிழ்-கொல்லுதற்குக் கவிழ்ந்த. புகர்முகம் - யானை. அதில் - அவ்வானையின் மேல் இருந்த. விருதர் -வீரர். சிரம் - தலை. விழுபொழுது - கீழே விழுங்கால். அறை - (என்னை வெட்டியோனைக்) கொல். (37) படை அற்றோர் குதிரையொடு பொருதமை 441. | விடுபடை பெறுகிலர் மற்றி னிச்சிலர் | | விரைபரி விழஎறி தற்கு முற்பட அடுகரி நுதல்பட விட்ட கைப்படை அதனையொர் நொடிவரை யிற்ப றிப்பரே. |
(பொ-நி.) சிலர், படைபெறுகிலர்; பரி எறிதற்கு கரிநுதல் படவிட்ட படை அதனை பறிப்பர்;(எ-று.) (வி-ம்.) படை - படைக்கருவி. விரைபரி: வினைத்தொகை. பரி-குதிரை. விழ-சாவ. எறிதற்கு-விடுதற்கு. முற்பட-முன்னமேயே. அடுகரி: வினைத்தொகை. கரி-யானை. நுதல்-நெற்றி. பட-அழுந்த. கை-தங் கை. படை - வாள், வேல் முதலியன. நொடி-கைநொடிப்பொழுது. வரை-அளவு. பறித்தல்-பிடுங்கல். (38) வீரன் யானைப்படையானோடு பொருத்து 442. | அமர்புரி தமதக லத்தி டைக்கவிழ் | | அடுகரி நுதலில டிப்பர் இக்களி றெமதென இருகண்வி ழிக்க உட்கினர் எனவிடு கிலர்படை ஞர்க்கு வெட்கியே. |
(பொ-நி.) அகலத்திடைக் கவிழ் கரிநுதலில் அடிப்பர்; வெட்கி, கண்விழிக்க உட்கினர் என விடுகிலர்; (எ-று.) (வி-ம்.) அமர் - போர். அமர்புரி கரி என இயைக்க. அகலம்-மார்பு. கவிழ்- தாக்குதற்குக் கவிழ்ந்த. கரி-யானை. நுதல்-முகம். உட்கினர்-அஞ்சினர். "என உட்கினர்" யானை வீரர். படைஞர்க்கு - படைவீரர்கட்கு. வெட்கி - வெட்கங்கொண்டு. விடுகிலர் - படைவிடுகிலர். அஞ்சிக் கண்மூடியமையின் அவர்மீது படை விடுகிலர் வீரர் என்க. (39) |