(வி-ம்.) அணி - இருதிறத்துப்படை வகுப்புக்களும். ஒருமுகமாக - பரந்துபட்டு இராமல். உந்துதல் -செலுத்தல். அமரர் -தேவர். அமர்-போர். துணி-துண்டம். மதமா - யானை. முறிந்தன - வெட்டுண்டன. துரகம்-குதிரை. நிரை- வரிசை. (42) போரின் கடுமை 446. | விருதர் இருதுணி பார்நி றைந்தன | | விடர்கள் தலைமலை யாய்நெ ளிந்தன குருதி குரைகடல் போல்ப ரந்தன குடர்கள் குருதியின் மேல்மி தந்தவே |
(பொ-நி.) துணி பார் நிறைந்தன ; தலை மலையாய் நெளிந்தன ; குருதி கடல்போல் பரந்தன ; குடர்கள் மிதந்த ; (எ-று.) (வி-ம்.) விருதர் - வீரர். துணி - உடல் துணிந்த பகுதிகள். பார்-மண். விடர்-வீரர். நெளிதல் - உருண்டோடல். குருதி-செந்நீர். குரைத்தல்-ஒலித்தல். பரத்தல் - பரவுதல். (43) இதுவும் அது 447. | கரிகள் கருவிகளோடு சிந்தின | | கழுகு நரியொடு காகம் உண்டன திரைகள் திசைமலை யோட டர்ந்தன திமில குமிலமெ லாம்வி ளைந்தவே. |
(பொ-நி.) கரிகள் சிந்தின; காகம் உண்டன; திரைகள் அடர்ந்தன; திமில குமிலமெலாம் விளைந்த; (எ-று.) (வி-ம்.) கரி - யானை. கருவி - கூட்டம். திரை - குருதிநீரின் அலை. திசைமலை -எட்டுத்திக்கு மலைகள். திமில குமிலம். ஒரு பொருட் பன்மொழி; பேரொலி. விளைந்த-உண்டாயின. (44) கலிங்க வேந்தன் பொருதலாற்றாது ஒதுங்கியமை 448. | புரசை மதமலை ஆயி ரங்கொடு | | பொருவ மெனவரும் ஏழ்க லிங்கர்தம் அரசன் உரைசெய்த ஆண்மை யுங்கெட அமரில் எதிர்விழி யாதொ துங்கியே. |
|