பக்கம் எண் :

178கலிங்கத்துப்பரணி

     (பொ-நி.)  மதமலை  ஆயிரம்  கொடு வரும் அரசன்,  ஆண்மையும்
கெட எதிர் விழியாது ஒதுங்கி; (எ-று.)

     (வி-ம்.) புரசை- யானைக்கழுத்திடு கயிறு. மதமலை-யானை. பொருவம்-
போர்செய்வோம். அரசன்:  அனந்தபதுமன்.  உரைசெய்த-தான்  உரைசெய்த.
அமரில்-போர்க்களத்தில். எதிர் விழியாது-முகத்தைப் பார்க்காமல்.
                                                         (45)

கலிங்க வேந்தன் களத்தைவிட்டு மறைந்து சென்றது

449.அறியும் முழைகளி லோபதுங்கிய
      தரிய பிலனிடை யோம றைந்தது
செறியும் அடவியி லோக ரந்தது
     தெரிய அரியதெ னாஅ டங்கவே.

     (பொ-நி.)  பதுங்கியது   முழைகளிலோ;  மறைந்தது  பிலனிடையோ,
கரந்தது அடவியிலோ; தெரிய அரிது எனா அடங்க; (எ-று.)

     (வி-ம்.) முழை - மலைக்குகை.  பிலன்-கீழறை.அடவி-காடு. கரந்தது -
மறைந்தது. அடங்க - பதுங்கியிருக்க.                          (46)

கலிங்கர் நடுக்கம்

450.எதுகொல் இதுஇது மாயை ஒன்றுகொல்
      எரிகொல் மறலிகொல் ஊழியின்கடை
அதுகொல் எனவல றாவி ழுந்தனர்
     அலதி குலதியோ டேழ்க லிங்கரே.

     (பொ-நி.)  கலிங்கர் "மாயை  ஒன்று  கொல்,  எரிகொல், மறலிகொல்,
ஊழியின்கடை அதுகொல்" என அலறா விழுந்தனர்; (எ-று.)

     (வி-ம்.) இது - போர். மாயைஒன்று-ஒரு  மாயவித்தை.  எரி-தீ. மறலி-
யமன்.ஊழி-யுகம்.அலதி குலதி-அலைதல் குலைதல்.              (47)

கலிங்கர் சிதைந்தோடியது

451.வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி
      மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்
இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர்
     இருவர் ஒருவழி போகல் இன்றியே.