(பொ-நி.) ஒருவழி போகல் இன்றி, சிலர் வழிவர்; சிலர் கடல் பாய்வர்; கரிமறைவர்; சிலர் பிலம் இழிவர்; சிலர் தூறு மண்டுவர்; (எ-று.) (வி-ம்.) வழிவர்-நழுவி ஓடுவர். கரி-யானையுள். பிலம் -மலைக்குகை. இழிவர்-இறங்குவர். தூறு-புதர். மண்டுதல்-நெருங்குதல். (48) இதுவும் அது 452. | ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர் | | உடலின் நிழலினை ஓட அஞ்சினர் அருவர் வருவரெ னாவி றைஞ்சினர் அபயம் அபயமெ னாந டுங்கியே |
(பொ-நி.) ஓடமுந்தினர்; நிழலினை அஞ்சினர்; நடுங்கி இறைஞ்சினர்; (எ-று.) (வி-ம்.) முந்தினர் - முற்பட்டனர். ஓட, நிழலினை அஞ்சினர் என இயைக்க. அச்சமிகுதியால் தந்நிழலையும் கண்டு அஞ்சினர் என்க.அருவர்- தமிழர். இறைஞ்சினர்-வணங்கினர். (49) இதுவும் அது 453. | மழைகள் அதிர்வன போலு டன்றன | | வளவன் விடுபடை வேழம் என்றிருள் முழைகள் நுழைவர்கள் போரில் இன்றுநம் முதுகு செயும்உப கார மென்பரே. |
(பொ-நி.) "வேழம் உடன்றன" என்று முழைகள் நுழைவர்கள்; "முதுகு செயும் உபகாரம்" என்பர்; (எ-று.) (வி-ம்.) மழை - மேகம். உடலுதல் - சினந்தெழுதல். வளவன்- குலோத்துங்கன்.வேழம்-யானை.முழை-மலைக்குகை.முதுகுகாட்டி ஓடினமையின் உயிர் பிழைத்தாராதலால் தம் முதுகைப் பாராட்டினர் என்க. (50) இதுவும் அது 454. | ஒருக லிங்கமொ ருவன ழித்தநாள் | | ஒருக லிங்கமொ ருவரு டுத்ததே. |
|