பக்கம் எண் :

180கலிங்கத்துப்பரணி

     (பொ-நி.)  ஒருவன்  கலிங்கம்  அழித்தநாள், ஒருவர்  உடுத்தது ஒரு
கலிங்கம்; (எ-று.)

     (வி-ம்.) ஒருவன்-கருணாகரன். கலிங்கம்-கலிங்ககநாடு. கலிங்கம்-ஆடை.
ஒருவர்  உடுத்தது - ஒவ்வொரு  வீரரும்  அணிந்தது. மேலாடையும் இழந்து
தோற்றோடினர் என்பதாம்.                                   (51)

சோழர்படை யானை குதிரைகளைக் கைபற்றியது

455.அப்படிக் கலிங்க ரோட
      அடர்த்தெறி சேனை வீரர்
கைப்படு களிறும் மாவும்
     கணித்துரைப் பவர்கள் யாரே?

     (பொ-நி.) கலிங்கர்  ஓட  எறிவீரர், கைப்படு களிறும் மாவும் கணித்து
உரைப்பவர்கள் யார்? (எ-று.)

     (வி-ம்.) ஓட - ஓடுமாறு. அடர்த்து  எறி-நெருங்கிக் கொன்ற. கைப்படு-
கையில் அகப்பட்ட. களிறு - ஆண்யானை. மா-குதிரை. கணித்தல்-அளவிடல்.
(52)

கைப்பட்ட களிறுகளின் தன்மை

456. புண்தரு குருதி பாயப்
      பொழிதரு கடமும் பாய
வண்டொடும் பருந்தி னோடும்
     வளைப்புண்ட களிற நேகம்.

     (பொ-நி.)  குருதிபாய,  கடமும்  பாய, வண்டொடும்  பருந்தினோடும்
வளைப்புண்ட களிறு அநேகம்; (எ-று.)

     (வி-ம்.) குருதி-செந்நீர். கடம்-மதநீர். வளைப்புண்ட-சூழப்பட்டிருக்கின்ற.
குருதியைக் கண்டு பருந்துகளும்,  மதநீரைக் கண்டு  வண்டுகளும் தாம் தாம்
உண்பதற்குச் சுற்றின. ஆதலால் இவ்வாறு கூறினார்.              (53)

இதுவும் அது

457.ஒட்டறப் பட்ட போரில்
      ஊர்பவர் தம்மை வீசிக்
கட்டறுத் தவர்போல் நின்று
     கட்டுண்ட களிற நேகம்.