பக்கம் எண் :

போர் பாடியது181


     (பொ-நி.) போரில்  ஊர்பவர்  தம்மை  வீசி, நின்று கட்டுண்ட களிறு
அநேகம்; (எ-று.)

     (வி-ம்.)  ஒட்டு அற - எஞ்சுதல்   அற. ஊர்பவர் - தம்மை  ஊர்ந்து
செலுத்தியோர்.  கட்டு - பாசம்.  கட்டறுத்தவர் - துறவோர்.  கட்டுண்ட -
சோழவீரர்களால் கட்டுண்ட.                                   (54)

இதுவும் அது

458.வரைசில புலிக ளோடு
      வந்தகட் டுண்ட வேபோல்
அரசருந் தாமும் கண்டுண்டு
     அகப்பட்ட களிற நேகம்.

     (பொ-நி.)புலிகளோடு  வரை  கட்டுண்டவேபோல அரைசரும் தாமும்
கட்டுண்டு அகப்பட்ட களிறு அநேகம்; (எ-று.)

     (வி-ம்.) வரை - மலை. அரைசர்:  போலி  அரசர்.  தாம்: யானைகள்.
மலைகள் யானைக்கும், அரசர்கள் புலிக்கும் ஒப்பாக உவமையுரைத்தார்.
                                                          (55)

சோழவீரர் கவர்ந்த பொருள்கள்

459.நடைவ யப்பரி யிரதம் ஒட்டகம்
      நவதி திக்குல மகளிரென்று
அடைய வப்பொழுது அவர்கள் கைக்கொளும்
     அவைக ணிப்பதும் அருமையே.

     (பொ-நி.) பரி, இரதம், ஒட்டகம், நிதிக்குலம், மகளிர் என்று அவர்கள்
கைக்கொளும் அவை கணிப்பதும் அருமை; (எ-று.)

     (வி-ம்.) வயம்-வலிமை. பரி-குதிரை. நிதி-செல்வம். அடைய -முழுதும்.
கணித்தல் - அளவிடல். அருமை - அரியதாகும்.                  (56)

கருணாகரன் கலிங்கவேந்தனைக் கொணருமாறு ஏவியது

460.இவைக வர்ந்தபின் எழுக லிங்கர்தம்
      இறையை யுங்கொடு பெயர்துமென்று
அவனி ருந்துழி அறிக வென்றனன்
     அபயன் மந்திரி முதல்வனே.