பக்கம் எண் :

182கலிங்கத்துப்பரணி

     
     (பொ-நி.)
மந்திரி  முதல்வன்,  இவை  கவர்ந்தபின்,  கலிங்கர்  தம்
இறையையும் கொடுபெயர்து மென்று அவன் இருந்து அறிக என்றனன்; (எ-று.)

     (வி-ம்.)  கலிங்கர்   தம்இறை - அனந்தபதுமன்.  கொடு - கொண்டு.
பெயர்தும் - செல்வோம்.  அவன்:  அனந்தபதுமன்.  உழி-இடம். அபயன் - குலோத்துங்கன்.முதல்வன்: கருணாகரன்.                         (57)

ஒற்றர்கள் கலிங்கர்கோனைத் தேடியமை

461.உரைகள் பிற்படு மளவில் ஒற்றர்கள்
      ஒலிக டற்படை கடிதுபோய்
வரைக ளில்புடை தடவி அப்படி
     வனமி லைப்புரை தடவியே

     (பொ-நி.)  ஒற்றர்கள்,  படை, போய்,  வரைகளில் புடைதடவி வனம்
இலைப்புரை தடவி; (எ-று.)

     (வி-ம்.)  உரை - கருணாகரன்   கட்டளை.  ஒற்றர்கள் - வேவுகாரர்;
ஒற்றியிருந்தறிபவர்  ஒற்றர்களும்  கடல் போன்ற படைகளும். என்க. வரை-
மலை. புடை  - பக்கம். அப்படி - அங்ஙனமே. வனம் - காடு.  இலைப்புரை  தடவி - இலைப்பொந்தினும் ஆராய்ந்து தேடி.
                                                         (58)

ஒற்றர்கள் மொழிந்தமை

462.சுவடு பெற்றிலம் அவனை மற்றொரு
      சுவடு பெற்றனம் ஒருமலைக்
குவடு பற்றியது அவன டற்படை
     அதுகு ணிப்பரிது எனலுமே.

     (பொ-நி.) அவனை  சுவடு  பெற்றிலம்;  மற்றொரு சுவடு  பெற்றனம்; அவன் படை மலைக்குவடு பற்றியது; அதுகுணிப்பரிது எனலும் ; (எ-று.)

     (வி-ம்.) சுவடு - அடையாளம். குவடு - உச்சி. அவன்: கலி்ங்கவேந்தன்
படை - சேனை.  குணித்தல் - அளவிடுதல். எனலும் - என   ஒற்றர்  சிலர்
சொல்லுதலும்.
                                                        (59)