அதுகேட்ட படைஞர் செய்தி 463. | எக்குவடும் எக்கடலும் எந்தக் காடும் | | இனிக்கலிங்கர்க் கரணாவது இன்றே நாளும் அக்குவடு மக்கடலும் வளைந்து வெய்யோன் அத்தமனக் குவடணையும் அளவிற் சென்றே. |
(பொ-நி.) இனி, குவடும் கடலும் காடும் கலிங்கர்க்கு அரணாவது இன்று நாளும் குவடும் கடலும் வளைந்து அத்தமனக்குவடணையு மளவில் சென்று; (எ-று.) (வி-ம்.) குவடு-மலை. இனி-புலன் தெரிந்துவிட்டமையின் இனி. அரண்- பாதுகாவல். இன்று - இல்லை. நாளும் - நாள் முழுதும். அ: கலிங்கநாட்டின் கண்ணவற்றைக் குறித்தது: வளைந்து - சுற்றிச்சுற்றிச் சென்று (கடைசியாக), வெய்யோன் - ஞாயிறு. அத்தமனக்குவடு - மறைகின்றமலை. அஸ்தமனம்- அத்தமனமெனத் தற்பவமாயிற்று. (60) படைஞர் குன்றைச் சூழ்ந்து நின்றமை 464. | தோலாத களிற்றபயன் வேட்டைப்பன்றி | | தொழுவடைத்துத் தொழுவதனைக் காப்பார்போல வேலாலும் வில்லாலும் வேலி கோலி வெற்பதனை விடியளவுங் காத்து நின்றே. |
(பொ-நி.) பன்றி தொழு அடைத்து, காப்பார் போல, வெற்பதனை வேலி கோலி, விடியளவும் காத்து நின்று; (எ-று.) (வி-ம்.) தோலாத - தோல்வியுறாத. வேட்டைப்பன்றி -வேட்டையிற் கொணர்ந்த பன்றி. தொழு விலங்குகளை அடைக்கும் பெரிய கூடு. கோலி- வளைத்து. வெற்பு-மலை. விடி அளவு-பொழுது விடியும்வரை. (61) குன்று காத்த கலிங்கவீரரை அழித்தமை 465. | செம்மலையாய் ஒளிபடைத்த தியாதோ என்றும் | | செங்கதிரோன் உதயஞ்செய்து உதய மென்னும் அம்மலையோ இம்மலையும் என்னத் தெவ்வர் அழிகுருதி நதிபரக்க அறுக்கும் போழ்தில். |
|