பக்கம் எண் :

184கலிங்கத்துப்பரணி

     (பொ-நி.) "இம்மலை,  ஒளி  படைத்தது,  யாதோ?  உதயமென்னும் அம்மலையோ   இம்மலையும்,"   என்ன,  தெவ்வர்   குருதி  நதி  பரக்க, அறுக்கும்போழ்து;  (எ-று.)

     (வி-ம்.) செம்மலை - சிவந்த   நிறமுள்ள   மலை.  யாதோ - யாது
காரணமோ. என்றும்-எந்நாளும். என்ன-என்று கண்டார்  சொல்ல.  தெவ்வர்
-பகைவர்.குருதி-செந்நீர்.  நதி-ஆறு.பரக்க-பரவிப்பாய.  அறுத்தல்-அழித்தல்.
                                                           (62)

கலிங்கர் மாற்றுருக்கொண்டு கரந்தமை

466.வரைக்கலிங்கர் தமைச்சேர மாசை ஏற்றி
    வன்தூறு பறித்தமயிர்க் குறையும் வாங்கி
அரைக்கலிங்கம் உரிப்புண்ட கலிங்கர் எல்லாம்
    அமணரெனப் பிழைத்தாரும் அநேகர் ஆங்கே.

     (பொ-நி.)   மாசை   ஏற்றி,   மயிர்க்குறையும்   வாங்கி  கலிங்கம்
உரிப்புண்ட கலிங்கர்  எல்லாம்,  அமணர்  என,  பிழைத்தாரும்  அநேகர்;
(எ-று.)

     (வி-ம்.) வரை-மலை.  சேர-அடையும்படி.   மாசு-பழிச்சொல்.  தூறு
-புதர். ஓடுங்கால் புதர்கள் பற்றக் கலிங்கர் மயிர்க் குறை  எய்தினர்  என்க.
வாங்கி - களைந்து.    அரை - இடை.  கலிங்கம் - ஆடை.   உரிப்புண்ட
-களையப்பெற்ற.   கலிங்கர் - கலிங்க   வீரர்.  அமணர் - சமணர்.   என
-என்றுபொய்புகன்று.                                          (63)

இதுவும் அது

467. வேடத்தால் குறையாது முந்நூலாக
     வெஞ்சிலைநாண் மடித்திட்டு விதியாற் கங்கை
ஆடப்போந் தகப்பட்டோம் கரந்தோம் என்றே
    அரிதனைவிட்டு உயிர்பிழைத்தார் அநேகர் ஆங்கே.

     (பொ-நி.)    அநேகர்,   சிலைநாண்  முந்நூலாக  இட்டு  "கங்கை ஆடப்போந்து   கரந்தோம்,  அகப்பட்டோம்"  என்று  உயிர்  பிழைத்தார்;
(எ-று.)

     (வி-ம்.) முந்நூல்-முப்புரியுள்ள பூணூல். சிலை-வில் - நாண் - கயிறு. முடித்திட்டு -  சுருட்டிக்   கட்டி.  விதி - முறைமை.  கரந்தோம் - போர்ப் படையைக்கண்டு மறைந்தோம். அரி-போர்க்கருவி; மலையுமாம்.       (64)