இதுவும் அது 468. | குறியாகக் குருதிகொடி ஆடை யாகக் | | கொண்டுடுத்துப் போர்த்துத்தங் குஞ்சி முண்டித்து அறியீரோ சாக்கியரை யுடைகண் டால்என் அப்புறமென் றியம்பிடுவர் அநேகர் ஆங்கே. |
(பொ-நி.) அநேகர், குறியாக, குருதிகொடி ஆடையாக உடுத்து, போர்த்து, முண்டித்து, ழுசாக்கியரை அறியீரோ; அப்புறம் என்ழு என்றியம்பிடுவர்; (எ-று.) (வி-ம்.) குறி - (புத்த) அடையாளம். குருதி - செந்நீர். கொடி -கொடிச்சீலை. குஞ்சி-முடிமயிர். முண்டித்து - மொட்டையடித்து. சாக்கியர் -புத்தர். உடைகண்டால்-எம் ஆடையைப்பார்த்தால். இயம்பல் - சொல்லல். (65) இதுவும் அது 469. | சேனைமடி களங்கண்டேம் திகைத்து நின்றேம் | | தெலுங்கரேம் என்றுசில கலிங்கர் தங்கள் ஆனைமணி யினைத்தாளம் பிடித்துக் கும்பிட்டு அடிப்பாணர் எனப்பிழைத்தார் அநேகர் ஆங்கே. |
(பொ-நி.) அநேகர் "தெலுங்கரேம், களம் கண்டேம், நின்றேம்" என்று தாளம் பிடித்து, கும்பிட்டு பாணரெனப் பிழைத்தார்; (எ-று.) (வி-ம்.) சேனைமடி - படைகள் இறந்துபட்ட. தெலுங்கரேம் - யாம் தெலுங்கு நாட்டினோம். களம்-போர்க்களம். சில மணி என இயைக்க.தாளம் பிடித்து - தாளமாகக்கொண்டு, அடி - அடிபற்றி வாழும். பாணரென -பாணரெனக் கண்டார் கொள்ளுமாறு. (66) சோழவீரர் கலிங்கர் அற அழித்தது 470. | இவர்கள்மேல் இனியொருவர் பிழைத்தார் இல்லை | | எழுகலிங்கத்து ஓவியர்கள் எழுதி வைத்த சுவர்கள்மேல் உடலன்றி உடல்க ளெங்கும் தொடர்ந்துபிடித் தறுத்தார்முன் அடைய ஆங்கே. |
|