(பொ-நி.) இவர்கள் மேல் ஒருவர் பிழைத்தார் இல்லை. எழுதி வைத்த உடல் அன்றி முன் தொடர்ந்து பிடித்து உடல்கள் அடைய அறுத்தார்; (எ-று.) (வி-ம்.) இவர்கள் - மாற்றுருக்கொண்டு பிழைத்தோர். ஓவியர்கள் -சித்திரமெழுதுவோர். சுவர்கள்மேல்-மதில்களின் மீது. தொடர்ந்து பிடித்து -பின்தொடர்ந்து சென்று பிடித்து வந்து. அடைய-முற்றும். (67) கருணாகரன் குலோத்துங்கன் கழல் பணிந்தது 471. | கடற்கலிங்கம் எறிந்து சயத் தம்பம் நாட்டிக் | | கடகரியும் குவிதனமும் கவர்ந்து தெய்வச் சுடர்ப்படைவாள் அபயனடி அருளி னோடுஞ் சூடினான் வண்டையர்கோன் தொண்டைமானே. | (பொ-நி.) வண்டையர்கோன் (ஆகிய) தொண்டைமான் எறிந்து, நாட்டி,கவர்ந்து, அபயன் அடி சூடினான்; (எ-று.) (வி-ம்.) கடல்கலிங்கம்; நாடு. சயத்தம்பம் - வெற்றித்தூண், கடகரி -மதயானை. குவிதனம் - குவியலாக உள்ள பொருள்கள். அடிசூடினான் -அடிகளை வணங்கினான். (68) ___________ 13. களம் பாடியது இங்ஙனம் கலிங்கத்தில் போர் நிகழ்ந்த வரலாற்றைக் காளிக்குக் கூறிய கலிங்கப்பேய், தேவாசுர, இராமாயண, மாபாரதப் போர்க்களத்தோடு ஒப்ப எண்ணத்தகும் அக் கலிங்கப் போர்க் களத்தைக்காணுமாறு காளியை அழைத்தது. காளியும் பேய்கள் சூழச் சென்றனள். சென்று போர்க்களக் காட்சி ஒவ்வொன்றையும் பேய்கட்குக் காட்டினள். காட்டியபின், குருதி நீரில் ஆடிக், கூழ் அடுமாறு பேய்களுக்கு கட்டளை இட்டனள். உடனே பேய்கள் ஒன்றையொன்று கூப்பிட்டன. பேய்கள் எல்லாம் பல்விளக்கி, நாவழித்து, நகந்திருத்தி, எண்ணெயிட்டுத் தலைமுழுகி, ஆடைபுனந்து, அணிகலன்கள் பூண்டு, கூழ் அடத்தொடங்கின. நிலத்தை மெழுகிக் கோலமிட்டு, அடுப்புவைத்துப் பானையை அடுப்பிலேற்றி, உணவுப் பொருள்களைக் கைக்கொண்டு, உலை வைத்து, வெங்காயமும் உப்பும்கொண்டு, அடுப்பில் தீமூட்டி, விறகுவைத்து, அரிசிகொண்டு, உரல்களில் உலக்கைகொண்டு |