பக்கம் எண் :

களம் பாடியது187


வள்ளைப்பாட்டுப்  பாடி,  அரிசியைத்  தீட்டின.  பின்  அரிசியைப்
புடைத்து அளந்து உலைதோறும் சொரிந்து, துடுப்பும் அகப்பையும் கொண்டு
அட்டன.

பின், கூழை உப்புப் பதம் பார்த்துக் கிண்டிப் பதம் பார்த்து  இறக்கி
வைத்தன; தண்ணீர் முகந்து வைத்துக் கொண்டன;  அலகிட்டு  நீர்தெளித்து
உண்பதற்கு   நிலம்   திருத்தின;  உண்கலம்  பரப்பின;  பகல்  விளக்கும்
பாவாடையும்   இட்டன;   உணவு   கொள்ள   எல்லாப்   பேய்களையும்
அழைத்தன; உணவு படைக்க அகப்பைகளைக் கொண்டன:  மடைப்பேய்கள்
கூழ் வார்க்கத்  தொடங்கின.

பல்வகைப்  பேய்கட்கும்  கூழ்  வார்க்கப்பட்டது. பேய்கள் எல்லாம்
உண்டன; வாய்  பூசின; வெற்றிலைபாக்  கயின்றன;  குதித்துக்  கூத்தாடின;
குலோத்துங்கனை  வாழ்த்தின,  இவ்வாறு  கூறி  முடிக்கின்றார்  ஆசிரியர்.

போர்க்களப் பெருமை

472.தேவாசுரம் ராமாயணம் மாபாரதம் உளவென்று
 ஓவாஉரை ஓயும்படி உளதப்பொரு களமே.

     (பொ-நி.) அப் பொருகளம், தேவாசுர, ராமாயண,  மாபாரதம்  உள
என்ற  உரை  ஓயும்படி  உளது;  (எ-று.)

     (வி-ம்.) தேவாசுரம் - சூரபதுமன்  போர்.  ராமாயணம்  மாபாரதம்
அப்போர்களைக் குறித்து நின்றன. உள- சிறப்புற்றுப்பேச  உள்ளன.  ஓவா
-ஒழியாத.  உரை-சொல்.  உளது-சிறப்புற்றுளது.  பொருகளம் -கருணாகரன்
போர்க்களம்.
                                                            (1)

கலிங்கப்பேய் காளியைக் களம் காணுமாறு அழைத்தலும்
காளி களம் குறுகலும்

473.காலக்கள மதுகண்டருள் இறைவீகடி தெனவே
 ஆலக்கள முடையான்மகிழ் அமுதக்களம் அணுகி.

     (பொ-நி.) களமது, கண்டருள் கடிதென; உடையான்  மகிழ்  அமுது,
களம் அணுகி; (எ-று.) 

     
(வி-ம்.) காலன் - யமன்.   இறந்த   உடல்களே   நிறைந்தமையின்
காலக்களமாயிற்று.   இறைவீ - காளியே.  கடிது - விரைவில்.  ஆலக்களம்
உடையான்- நஞ்சுபூண்ட  மிடற்றையுடைய  சிவன்.  மகிழ்  அமுது:  காளி.
அமுதத்தை     யொத்தவள்:     ஆகுபெயர்.     இதுவரை   மொழிந்த
செய்திகளெல்லாம் கலிங்கப் பேயின் கூற்றேயாவதைத் தெளிக.
                                                           (2)