காளி போர்க்களங்கண்டு வியந்துமொழிந்தது 474. | என்னேஒரு செருவெங்களம் | | எனவேயதி சயமுற்று அந்நேரிழை அலகைக்கண மவைகண்டிட மொழியும். |
(பொ-நி.) அந் நேரிழை, "களம் என்னே" என அதிசயமுற்று, மொழியும்; (எ-று.) (வி-ம்.) ஒரு- ஒப்பற்ற. செரு -போர். நேரிழை-காளி. அலகை-பேய். கணம்-கூட்டம். (3) குருதி வெள்ளத்தில் யானை மிதந்து சென்றமை 475. | உடலின்மேல் பலகாயஞ் சொரிந்து பின்கால் | | உடன்பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை கடலின்மேல் கலந்தொடரப் பின்னே செல்லுங் கலம்போன்று தோன்றுவன காண்மின் காண்மின். |
(பொ-நி.) சொரிந்து, பதைப்ப, உதிரத்தே ஒழுகும் யானை, கடலின்மேல் கலம்போன்று தோன்றுவன காண்மின்! (எ-று.) (வி-ம்.) காயம்-புண்ணால். சொரிந்து-குருதியைச் சொரிந்து. பின் -உடலின் பிற்பகுதி. உதிரம்-குருதி. ஒழுகுதல்-மிதந்து செல்லல். கலம் -மரக்கலம். யானைகள் குருதி வெள்ளத்தில் ஒன்றன்பின் ஒன்றாகச் செல்வது, கடலின்மேற் செல்லும் மரக்கலங்கள் போன்றிருந்த தென்க. (4) குதிரைகள் அடிபெயர்க்கலாற்றாது நின்றமை 476. | நெடுங்குதிரை மிசைக் கலணை சரியப் பாய்ந்து | | நிணச்சேற்றிற் கால்குளிப்ப நிரையே நின்று படுங்குருதிக் கடும்புனலை அடைக்கப் பாய்ந்த பலகுதிரைத் தறிபோன்ற பரிசு காண்மின். |
|