(பொ-நி.) குதிரை, கலணை சரிய, சேற்றில் கால்பாய்ந்து குளிப்ப, நின்று, குதிரைத்தறி போன்ற பரிசு காண்மின் ! (எ-று.) (வி-ம்.) கலணை-சேணம். பாய்ந்து-நெடுந்தொலை சென்று. நிணம் -கொழுப்பு குளித்தல்-மூழ்குதல். நிரை-வரிசை. குருதி-செந்நீர். கடும்புனல் -வெள்ளம். பாய்ந்த-நெடுந்தொலை அழுத்தி வைக்கப்பட்ட. குதிரைத்தறி: வெள்ளத்தை அடைத்துத் தடுக்கும் மரப்பலகை. பரிசு-தன்மை. (5) வீரர் முகமலர்ந்து கிடந்தமை 477. | விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண | | மேன்மேலும் முகமலரும் மேலோர் போலப் பருந்தினமும் கழுகினமும் தாமே யுண்ணப் பதுமமுகம் மலர்ந்தாரைப் பார்மின் பார்மின். | (பொ-நி.) விருந்தினரும் வறிஞரும் உண்ண, முகம் மலரும் மேலோர் போல, பருந்தினமும் கழுகினமும் உண்ண, முகமலர்ந்தாரைப் பார்மின்! (எ-று.) (வி-ம்.) வறியவர் - ஏழையர். நெருங்கி உண்ண - அடுத்தடுத்து உண்பதற்கு. மேலோர்: இல்லறத் துயர்ந்தோர். பதுமாம் - தாமரை. மலர்ந்தார்-மலர்ச்சிகொண்ட போர்வீரர்: வினையாலணையும் பெயர். (6) குற்றுயிராய்க் கிடந்த வீரரை நரி சூழ்ந்திருந்தமை 478. | சாமளவும் பிறர்க்குதவா தவரை நச்சிச் | | சாருநர்போல் வீரருடல் தரிக்கும் ஆவி போமளவும் அவரருகே இருந்து விட்டுப் போகாத நரிக்குலத்தின் புணர்ச்சி காண்மின். | (பொ-நி.) சாமளவும் உதவாதவரை, சாருநர்போல், ஆவிபோம் அளவும், அருகே இருந்து, விட்டுப்போகாத, நரிக்குலத்தின் புணர்ச்சி காண்மின்! (எ-று.) (வி-ம்.) நச்சி-விரும்பி. சாருநர்-அடைவோர். தரித்தல்-நிலைபெறல். ஆவி-உயிர். நரிக்குலம்-நரிக்கூட்டம். புணர்ச்சி-கூட்டம். (7) |