பக்கம் எண் :

களம் பாடியது193


     (பொ-நி.)  செங்களத்தே  நிணப்போர்வை  மூடிக்கொள, கருங்காகம்
வெண்காகமாய்  நின்ற  ஆ(று)  காணாத  காண்மின்கள்; (எ-று.)

     
(வி-ம்.) ஆகவம்-போர். தயங்குதல்-விளங்குதல். நிணம் - கொழுப்பு.
நின்றவா-நின்றவாறு என்ன  வியப்பு.  காணாத - இதுவரை  காணாதவற்றை.
பிணங்களின் கொழுப்பு காக்கைகளின்  மேல்  மூடுதலால்.  கருநிறம்  மாறி
வெண்ணிறமாகத் தோற்றங்  கொண்டதென்க.
                                                           (15)

களம் தாமரைப் பொய்கை போன்று காட்சியளித்தது

487.மிடையுற்ற தேர்மொட்டு மொட்டொக்க
     வெஞ்சோரி நீரொக்க வீழ்தொங்கல்பா
சடையொக்க அடுசெங்க ளம்பங்க
   யப்பொய்கை யாமாறு காண்மின்களோ.

     (பொ-நி.) தேர் மொட்டு மொட்டு ஒக்க, சோரி நீர் ஒக்க, தொங்கல்
பாசடைஒக்க, செங்களம் பங்கயப் பொய்கை ஆமாறு காண்மின்கள்; (எ-று.)

     (வி-ம்.) மிடைதல்-நெருங்குதல், மொட்டு - தேரின் கூம்பு, மொட்டு
-தாமரை மொட்டு. சோரி-குருதி. தொங்கல்-ஆடவர்மயிர்.  பாசடை- பசிய
இலை.  அடுசெங்களம்  - போர்புரிகின்ற  சிவந்த  போர்க்களம். பங்கயம்
-தாமரை.                                                  (16)

வேல் தைத்து நிலத்துவிழா வீரர்நிலை

488.வெயில்தாரை வேல்சூழ வும்தைக்க
     மண்மேல் விழாவீரர் வேழம்பர்தங்
கயிற்றா லிழுப்புண்டு சாயாது
   நிற்கும் கழாய்ஒத்தல் காண்மின்களோ.

     (பொ-நி.) வேல்தைக்க, விழாவீரர், வேழம்பர்தம் கயிற்றால் சாயாது
நிற்கும் கழாய் ஒத்தல் காண்மின் ; (எ-று.)

     
(வி-ம்.) வெயில்- ஒளி. தாரை - ஒழுங்கு. சூழவும் - உடலெங்கும்.
வேழம்பர்-கழைக்கூத்தர்.  கழாய் - மூங்கில்.  வீரர்களின்  உடல் முழுதும்
தைத்த அம்புகளால், வீரர் இறந்தும்  தரையில்  வீழாமல்  நிற்குங் காட்சி,
கழைக் கூத்தர்  கயிற்றால்