இழுத்துக் கட்டிய கயிற்றின் துணையால் கீழே விழாமல் நிற்பது போன்றிருந்தன என்க. (17) களத்தில் கழுகும் பருந்தும் கண்ட காட்சி 489. | இருப்புக்க வந்தத்தின் மீதேற | | லும்சூரர் எஃகம்பு தைக்க இறகைப் பரப்பிச்சு ழன்றிங்கொர் பாறாட ஈதோர் பருந்தாடல் காண்மின்களோ. | (பொ-நி.) கவந்தத்தின்மீது ஏறலும், சூரர் இருப்பு எஃகம் புதைக்க. இங்கு இறகைப் பரப்பிச் சுழன்று பாறாட, பருந்தாடல் காண்மின்கள்; (எ-று.) (வி-ம்.)இருப்பு எஃகம் என இயைக்க. கவந்தம் - தலையற்ற உடல் இருப்பு எஃகம் -இரும்பு வேல். புதைக்க - (உடம்பில்) அழுந்த. இறகைப் பரப்பி-சிறகுகளை விரித்து. பாறு-கழுகு. (18) வில் வாள் வீரர் கிடந்தமை கண்டு கூறியது 490. | வருஞ்சேனை தஞ்சேனை மேல்வந்து | | றாமேவில் வாள்வீரர் வாணாளுகக் கருஞ்சேவ கஞ்செய்து செஞ்சோற றச்செய்த கைம்மாறு காண்மின்களோ. |
(பொ-நி.)வில் வாள் வீரர் சேனை, தம் சேனை மேல் உறாமே; சேவகம் செய்து, செஞ்சோறு அறச்செய்த கைம்மாறு காண்மின்கள்; (எ-று.) (வி-ம்.) வரும் சேனை -எதிர்த்துவரும் படைகள், உறுதல்-சார்(ந்து அழித்)தல். வாணாள் - தங்கள் வாழ்நாள.் உக-கெட. கருமை-வலிமை. கருஞ்சேவகம் -வலிமை காட்டும் போர்ச்செயல். செஞ்சோறு-செஞ்சோற்றுக் கடன். அற-கழிய. கைம்மாறு-மாற்றுதவி. (19) யானைவீரர் தலையின் காட்சி 491. | யானைப்ப டைச்சூரர் நேரான | | போழ்தற் றெழுந்தாடு கின்றார்தலை மானச்ச யப்பாவை விட்டாடும் அம்மானை வட்டொத்தல் காண்மின்களோ. |
|